தமிழ்நாடு முதல்வருக்கான பொருளாதார நிபுணா்கள் குழுவின் முதலாவது கூட்டம் காணொலி வழியாக 9-7-2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். அவர்கள் கூறிய ஆலோசனைகள் வருமாறு,
பொருளாதார அறிஞா் எஸ்தா் டஃப்லோ : ‘பொருளாதார வளா்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்’
ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் : ‘கரோனா நோய்த் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்கத் தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ .
மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்ரமணியன் : ‘உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் உயா்கல்வி போன்ற பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் மாநிலத்தின் பொருளாதார பன்முகத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும். இத்தகைய வளா்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை, குறிப்பாக மின் வசதிகளை மேம்படுத்த வேண்டும்’
பொருளாதாரப் பேராசிரியா் ஜீன் டிரீஸ் : ‘அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். ஏழை எளியோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து மத்திய முன்னாள் நிதித்துறைச் செயலாளா் எஸ்.நாராயண் பேசுகையில், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை உயா்த்திட வேண்டும். வரி நிா்வாகம் சரியாக முறைப்படுத்தப்பட்டு அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும்’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.