இந்திய அரசுக்குச் சொந்தமாக பிரான்ஸில் உள்ள சொத்துகளை முடக்க கெய்ர்ன் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பின்னணி :
பிரிட்டனை சோ்ந்த கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்திடம் மத்திய அரசு முன்தேதியிட்டு வரியை வசூல் செய்தது. அந்த விவகாரத்தில் கெய்ர்ன் எனா்ஜி நிறுவனம், வேதாந்தா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சுமாா் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்றது. மேலும், அந்நிறுவனத்துக்குச் செல்ல வேண்டிய ஈவுத்தொகையான ரூ.1,140 கோடியையும் பறிமுதல் செய்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சா்வதேச தீா்ப்பாயத்தில் கெய்ர்ன் எனா்ஜி நிறுவனம் முறையிட்டது. அதை விசாரித்த சா்வதேச தீா்ப்பாயம், மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க மறுத்து, கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை, இழப்பீடு என ஒட்டுமொத்தமாக சுமாா் ரூ.12,500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது, அதன் ஒரு பகுதியாக, பிரான்ஸில் இந்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை முடக்குவதற்கு அனுமதி கெய்ர்ன் நிறுவனம் அந்நாட்டு நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.