Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் காலமானார்

 மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார்  காலமானார் :  

  • திரு. இரா.இளங்குமரனார்  30.1.1927-ல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தார்.
  • முழுமையாக கிடைக்கப்பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தை தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்து. அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
  • 1963-ல் இவர் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை, தமிழகம் வந்திருந்த அன்றைய பிரதமர் நேரு வெளியிட்டார்.
  • புறநானூற்றை எளிய தமிழில் எழுதி, அந்தத் தொகுப்பு நூலை 2003-ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார்.
  • 4,865 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். 
  • திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றினார். 
  • தமிழ்ச் சங்கம் குறித்த வரலாற்று நூலையும் இவர் எழுதியிருக்கிறார். 
  • பாவாணர் வரலாறு , பாவாணர் மடல்கள் (இருதொகுதி) , பாவாணர் வேர்ச்சொல்லாய்வுத் தொகுப்பான 'தேவநேயம்' (14தொகுதி) , தமிழ்ச் சொற்களுக்குப் பொருட்காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு 'செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்' (பத்துத்தொகுதி) என 500க்கும் அதிகமான தனித்தன்மையான  நூல்வரிசைகளை இரா.இளங்குமரனார் வழங்கி உள்ளார்.
  • அழிந்துபோன நூல்களாகக்  கருதப்பட்ட 'காக்கைப்பாடினியம்', 'தமிழக ஒழுகு' முதலிய பலநூல்கள்   இவர் பதிப்பால் உயிர்பெற்றுள்ளன. 
  • சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும்   'சுவடிக்கலை' எனும் நூலை எழுதியுள்ளார். 

நன்றி : தமிழ் இந்து 

https://www.hindutamil.in/news/tamilnadu/697367-tamil-scholar-ilangumaranar-passed-away-5.html


1 கருத்து:

  1. இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி

    https://solalvallan.com/topics/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/

    பதிலளிநீக்கு

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot