நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

”கிளவுட் சீடிங் ” (Cloud seeding) முறையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப் பொழிவு

 ”கிளவுட் சீடிங் ” (Cloud seeding) முறையில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப் பொழிவு உருவாக்கப்பட்டுள்ளது.  கிளவுட் சீடிங் எனப்படுவது விமானம் மூலமாக ரசாயன உப்புகள் வானில் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள குமுலஸ் எனப்படும் தாழ்வாக இருக்கும் மேகங்களில் தூவி விட வைப்பதாகும். பொதுவாக சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, டிரை ஐஸ் (திட கார்பன் டை ஆக்சைடு) ஆகியவை ஒன்றாக கலந்து மேகத்தில் தூவப்படுகிறது.இதில் தாழ்வான நடுத்தர உயரத்தில் உள்ள குமுலஸ் மேகங்கள் பயன்படுத்தப்படுகிறது. அமீரகத்தில் தற்போது பாதிப்புகளை ஏற்படுத்தாத பொட்டாசியம் குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு உப்புகள் ரசாயனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

நன்றி - தினத்தந்தி. 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!