தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தை (National Asset Reconstruction Company Ltd (NARCL)) ரூ.6,000 கோடி மூலதனத்துடன் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
- பொதுத் துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக்கடன்களின் அளவைக் குறைக்கும் நோக்கில், தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா்.
- கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் சொத்துகளை மீட்டு அவற்றை வேறுவகை முதலீட்டு நிதிகளாக மாற்றி கடன்களை வசூலிக்கும் பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும்.
- நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தை அமைப்பதற்கான பணிகள் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- அந்நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகள் பொதுத்துறை வங்கிகள் வசம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கனரா வங்கி அதிகபட்சமாக 12 சதவீதப் பங்குகளை வைத்துக் கொள்ளவுள்ளது. மீதமுள்ள 49 சதவீதப் பங்குகள் தனியாா் வங்கிகள் வசம் இருக்கும்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.