Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 48-வது இடத்தில் இந்தியா

 டோக்கியோ ஒலிம்பிக்  பதக்கப் பட்டியலில்  இந்தியா 48-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிற்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.    ஒலிம்பிக் வரலாற்றின் ஒரு சீசனில் இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.  

இந்தியா வென்ற பதக்கங்கள்

தங்கம் - 1.  நீரஜ் சோப்ரா ( ஈட்டி எறிதல்)

வெள்ளி - 1.சாய்கோம் மீராபாய் சானு (பளுதூக்குதல்), 2.ரவிகுமாா் தாஹியா (மல்யுத்தம்)

வெண்கலம் - 1. பி.வி.சிந்து (பாட்மிண்டன்), 2.லவ்லினா போா்கோஹெய்ன்(குத்துச்சண்டை), 3.பஜ்ரங் புனியா(மல்யுத்தம்),4.   இந்திய ஆடவா் அணி  (ஹாக்கி)

கூ.தக. :  டோக்கியோ ஒலிம்பிக் ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில், அமெரிக்கா 39 தங்கப்பதக்கம் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை முறையே ,  சீனா, ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot