டோக்யோ பாராலிம்பிக் போட்டியில்,
மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை அவர் சமன் செய்தார்.
ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில், யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார் மற்றும் வினோத் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை பாவனா படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஈட்டி எறிதல் எஃப் 45 பிரிவில் இந்தியாவின் தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.