ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் "மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது"(Major Dhyan Chand Khel Ratna Award) எனப் பெயர்மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கூ.தக.
'கேல் ரத்னா' விருது, இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும்.
தயான்சந்த் அவர்கள் இந்தியாவின் பழம்பெரும் ஹாக்கி வீரர் ஆவார். 1926 முதல் 1948 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1000 க்கும் மேல் கோல்களை எடுத்துள்ளார்.
இந்த விருது ஆண்டுதோறும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் "நான்கு கடந்த ஆண்டுகளாக விளையாட்டு துறையில் மிகச்சிறந்த பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது, ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.