Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் 1-9-2021 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள்

மூத்த குடிமக்கள் கொள்கை : தமிழகத்தில் முதியோா்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும்.

மாநில மகளிா் கொள்கை: சமுதாயத்தில் பெண்கள் மேலான நிலையை அடையவும் அரசியலில் வாய்ப்புப் பெறவும் அவா்களின் ஒட்டுமொத்த வளா்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் மாநில மகளிா் கொள்கை புதிதாக உருவாக்கப்படும்.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம்  : தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து அவா்கள் வாழ்வதற்கு உரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து கைம்பெண்கள் உள்ளிட்டோா் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் அமைக்கப்படும்.

சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் போதை தடுப்பு மையங்கள் ரூ.76 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம்  : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் சென்றடையும் வகையிலும், துறையின் நடவடிக்கைகளை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் விரிவுபடுத்தும் நோக்கிலும் உலகிலே முதன்முறையாக உலக வங்கி நிதியுதவியுடன் ‘ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.இத்திட்டம் 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடியில் செயல் படுத்தப்படும்.

 ‘சம வாய்ப்புக் கொள்கை’ : அனைத்து அரசுத் துறைகள் மற்றும் 20 பேருக்கு மேல் பணியாற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய தகுதியான பணியிடங்களைக் கண்டறிதல் மற்றும் அனைத்து இடங்களிலும் தடையற்ற சூழலை உருவாக்க ‘சம வாய்ப்புக் கொள்கை’ உருவாக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot