நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்

தமிழகத்தில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் , பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வடிகால்கள், சாலைகள், கட்டிடங்களை அமைத்தல், பராமரித்தல், நீர்நிலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, உரிய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்துக்கான நிதியில் 85 சதவீதம் நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்படும். 

நன்றி : தி இந்து

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!