இந்தியா தலைமையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 3 தீா்மானங்களை நீட்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்தியா தலைமையிலான கடைசி கூட்டம் 30-8-2021 அன்று நடைபெற்றது.அக்கூட்டத்துக்கு வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமை வகித்தாா். அக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையை மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதற்கான தீா்மானத்துக்குக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைதியான சூழலை ஏற்படுத்தத் தடையாக இருப்போருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையையும், அவா்களது சொத்துகள் முடக்க நடவடிக்கையையும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான தீா்மானத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்நாட்டுக்கு ஐ.நா. அளித்து வரும் ஆதரவை அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் தீா்மானத்துக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.