மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 வர்த்தக வாய்ப்புகள், ரேசன் கடைகளின் வருமானம் ஆகியவற்றை அதிகரிக்க, மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன்  (CSC e-Governance Services India Limited (CSC) ) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.   சிஎஸ்சியின் சேவைகளை அனுமதிப்பதன் மூலம், ரேசன் கடைகளின வருமானம் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான சாத்தியங்களை ஆராயும் படி அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.    புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, தற்போதுள்ள ரேசன் கார்டுகளில் புதிய தகவல்களை சேர்ப்பது, ஆதார் எண் சேர்ப்பது, ரேசன் பொருட்களின் இருப்பு நிலவரத்தை அறிவது, புகார்களை பதிவு செய்வது போன்ற சேவைகளை, சிஎஸ்சி மூலம் மேற்கொள்வது பற்றி மாநிலங்கள் ஆராயலாம். இது மாநில அரசுகளின் விருப்பத்தை பொருத்தது. தரவு பாதுகாப்பு மற்றும் இதர வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


 
                                                                   
     

Related Posts

Post a Comment