தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைத்து தமிழக அரசு 23-9-2021 அன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை, வேளாந்துறை, கால்நடைத்துறை, தொழில்துறை செயலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்தக் குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி தலைவருக்கு அறிக்கைகளை அளிக்கும். மேலும், குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.