ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸின் பதவி காலத்தை 2021 டிசம்பர் மாதம் 10-ந் தேதிக்கு அப்பால் மேலும் 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கிறவரையில், எது முன்கூட்டி அமைகிறதோ அதுவரையில் மறுநியமனம் செய்வதற்கு மத்திய மந்திரிசபையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2024-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி வரை பதவி வகிப்பார். 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்தபிறகு, பதவி நீட்டிப்பு பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் ஒரே கவர்னர் என்ற பெயரை சக்தி காந்ததாஸ் பெறுகிறார்.
கூ.தக. : தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர், சக்திகாந்த தாஸ் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவராவர். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.