Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

”பாரத்நெட் திட்டத்தை” (BharatNet Project ) தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கான சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம்

 ”பாரத்நெட் திட்டத்தை” (BharatNet Project ) தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கான சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் 20.10.2021 அன்று 'தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்' (Tamil Nadu FibreNet Corporation Limited (TANFINET))  மற்றும்  M/s L&T (Package C), M/s ITI Ltd (Package D) and Third-Party Agency M/s BECIL, ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. 

பாரத்நெட் திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராம பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழைக் கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம், ரூ.1815.32 கோடி செலவில் செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும்.
பாரத்நெட் திட்டத்தின் மூலம், அனைத்து கிராமப்புறங்களுக்கும், மலிவான மற்றும் தரமான “டிஜிட்டல்” சேவைகள், மின் கல்வி (e-Education), தொலை மருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் மூன்று விதமான சேவைகள் (Triple Play) ஆகிய சேவைகளை வழங்க முடியும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெற முடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழி வகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot