மத்திய அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திஷா கமிட்டி’ (Tamil Nadu state level District Development Coordination and Monitoring (Disha) Committee) அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இக்குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும், அதன் உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர். நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், பி.ரவீந்திரநாத்குமார், கே.நவாஸ்கனி ஆகியோரும்; நிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எ.நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும்; மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், மு.பூமிநாதன், ஜெ.எம்.எச்.அசன் மவுலானா மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் உள்ளனர்.
பணிகள் :
இக்குழு, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து, திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்யும்.
அதோடு, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லது நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை இக்குழுவின் பணியில் அடங்கும்.
நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.