”புலம்பெயர் தமிழ நல வாரியம்” அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும். ரூ.5 கோடி மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு “புலம்பெயர் தமிழர் நலநிதி” ஒன்று உருவாக்கப்படும். இதற்காக மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடி மற்றும் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும். பிற அம்சங்கள் வருமாறு,
புலம் பெயர் தமிழர் குறித்த தரவுத் தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்தோருக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனைப் பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி, வலைத்தளம் மற்றும் கைப்பேசி செயலி ஏற்படுத்தப்படும்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
ஜனவரி 12 - ஆம் நாள் “ புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாகக்” கொண்டாடப்படும்.
வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர்மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் "எனது கிராமம்" என்கின்ற திட்டம் துவங்கப்படும். இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டடங்களைக் கட்டித் தரவும், சீரமைத்திடவும் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
கோவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாகச் சுமார் ஏழு இலட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையிழந்தும் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மொத்தமாக வெளிநாட்டில் உள்ள தமிழா் நலனைப் பேணிட, நலவாரியம், அதுசாா்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.20 கோடி ஒதுக்கப்படும்
கூ.தக. :
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 1-3-2011 -ஆம் நாள் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சியின்போது இயற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.