பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் அவர்களை வாடிகன் நகரில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையில் 30.10.2021 அன்று சந்தித்து உரையாடினார்கள். இதன் மூலம் போப் ஆண்டவரை சந்திக்கும் 5ஆவது இந்தியப் பிரதமர் எனும் சிறப்பை திரு. நரேந்திர மோடி அவர்கள் பெற்றுள்ளார்கள் . கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம், மறைந்த பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய், வாடிகன் சென்று அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பாலை சந்தித்தார். இந்தியா மற்றும் வாடிகன் இடையே, கடந்த 1948ம் ஆண்டு முதல் தூதரக உறவு நிலவுகிறது. கத்தோலிக்க மக்கள் அதிகமாக வசிக்கும் இரண்டாவது பெரிய ஆசிய நாடு இந்தியா.
இதற்கு முன்னர் போப் ஆண்டவரைச் சந்தித்த பிரதமர்கள்
1955 - நேரு
1981 - இந்திராகாந்தி
1997 - ஐ.கே.குஜ்ரால்
2000 - அடல் பிகாரி வாஜ்பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.