Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

"இல்லம் தேடிக் கல்வி” திட்டம்

"இல்லம் தேடிக் கல்வி” எனும் திட்டத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை 15 நவம்பர் 2021  அன்று தொடங்கவுள்ளது.  

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்  கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைப்பதாகும்.   

முதற்கட்டமாக கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சை, திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

இந்த கற்றல் இழப்பை ஈடு செய்வதற்காக புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இத்திட்டத்தின் படி, நகர்ப்புறங்களில் பள்ளிக்கூடங்களிலும், கிராமப்புறங்களில் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ளலாம். தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot