Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிஎம் கேர்ஸ் குழந்தைகளுக்கான திட்டத்திற்கு (PM Cares For Children Scheme) வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 பிஎம் கேர்ஸ் குழந்தைகளுக்கான திட்டத்திற்கு (PM Cares For Children Scheme)  வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது .   குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகையும், 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சமும் வழங்க வகைசெய்கிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான குழந்தைகளின் தகுதிகள் பின்வருமாறு:

பெற்றோர்கள் இருவரும் (II) வாழும் ஒரு பெற்றோர் அல்லது (III) சட்டப்படியான காப்பாளர் / தத்தெடுத்த பெற்றோர்கள் / தத்தெடுத்த பெற்றோர்களில் ஒருவர், கொவிட் -19 என்பதைப் பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்த 11.03.2020லிருந்து 31.12.2021க்குள் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்திருந்தால் இந்தத் திட்டத்தில் பயனாளியாக இணையமுடியும் (IV) பெற்றோர்கள் இறந்த தேதியில் சம்பந்தபட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது

அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.

பயனாளிக்கு வழங்கப்படும் மொத்தமான ரொக்கத்தொகை அவர்களால் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளியாக அடையாளம் காணப்படும் குழந்தைகள் 18 வயது அடையும்போது ரூ.10 லட்சம் இந்த கணக்கில் சேர்க்கப்படும். 18 வயதிலிருந்து இவர்கள் மாதந்தோறும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம். 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சத்தை அவர்கள் மொத்தமாக பெறுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot