போலந்தில் நடைபெற்ற சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் பிரெசிடெண்ட்’ஸ் கோப்பை போட்டியில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.இதில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா்/துருக்கியின் ஆஸ்கா் வாா்லிக் இணை முதலிடம் பிடித்தது. மானு/ஆஸ்கா் ஜோடி 9 புள்ளிகளுடன் தங்கத்தை கைப்பற்ற, சீனாவின் ஜியாருய்ஷுவான் ஜியாவ்/எஸ்டோனியாவின் பீட்டா் ஆலெஸ்க் இணை 7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. ஜொ்மனி/பிரான்ஸ் போட்டியாளா்கள் இணைந்த கூட்டணி வெண்கலம் பெற்றது.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.