Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அண்டார்டிகாவிற்கான இந்தியவின் 41-வது அறிவியல் பயணம் தொடக்கம்

 அண்டார்டிகாவிற்கான 41-வது அறிவியல் பயணத்தை  (41st Scientific Expedition to Antarctica) இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது, 23 விஞ்ஞானிகள் மற்றும் துணைப் பணியாளர்கள் அடங்கிய முதல் குழு இந்திய அண்டார்டிக் நிலையமான மைத்ரியை நவம்பர் 2021 முதல் வாரத்தில் அடைந்தது.  

41-வது பயணத்தில் இரண்டு முக்கிய திட்டங்கள் உள்ளன. பாரதி நிலையத்தில் உள்ள அமெரி பனி அடுக்குகளின் புவியியல் ஆய்வுகளை உள்ளடக்கியது முதல் திட்டம் ஆகும். இந்தியாவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான தொடர்பை ஆராய இது உதவும்.

அறிவியல் ஆய்வுகள் மற்றும் மைத்ரிக்கு அருகில் 500 மீட்டர் பனிக்கட்டியை துளையிடுவதற்கான ஆயத்த வேலைகளை உள்ளடக்கியது இரண்டாவது திட்டமாகும். பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வமைப்பு மற்றும் நார்வே போலார் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றுடன் இணைந்து பனிக்கட்டி துளையிடும் பணி மேற்கொள்ளப்படும்.

1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டம், 40 அறிவியல் பயணங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தக்ஷின் கங்கோத்ரி (1983), மைத்ரி (1988) மற்றும் பாரதி (2012) என பெயரிடப்பட்ட மூன்று நிரந்தர ஆராய்ச்சி தளங்களை அண்டார்டிகாவில் உருவாக்கியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot