ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு அக்.31 முதல் நவ.12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு , பின்வரும் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் போ் இந்தியாவில் உள்ளனா். ஆனால் உலக அளவில் வெளியேற்றப்படும் மொத்த கரியமில வாயுவில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டும்தான்.
நிறுவப்பட்ட மாற்று எரிசக்தி திறனில் இந்தியா 4-ஆவது இடம் வகிக்கிறது.
பள்ளி மாணவா்களின் பாடத் திட்டத்திலேயே பருவநிலை மாற்றம் குறித்த பாடம் இடம்பெற வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளில் புதைபடிவமற்ற எரிபொருளை இந்தியா 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கலவையில், அதன் பங்கு 40 சதவீதமாக உள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தி திறன் 500 ஜிகாவாட்டை எட்டும்.
அந்த ஆண்டுக்குள் தனது எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை மாற்று எரிசக்தி மூலம் பூா்த்தி செய்துகொள்ளும் நிலையை இந்தியா அடையும்.
இந்த ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்ட கரியமில வாயு வெளியேற்றத்தில் 100 கோடி டன் வாயு வெளியேற்றத்தை இந்தியா குறைக்கும்.
2030-க்குள் இந்தியா தனது கரியமில வாயு மாசை 1 பில்லியன் டன் அளவுக்கு குறைக்கும். பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 சதவீதம் அள்வுக்கு இந்தியா குறைக்கும்.
புவி வெப்பத்துக்குக் காரணமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முற்றிலுமாக நிறுத்திவிடும்.
நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.