ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான மனிதர்களுடன் கூடிய சமுத்ரயான்(Samudrayan) திட்டம் சென்னையில் 29.11.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், இஸ்ரோ, சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட , மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலமான மத்சியா 6000, ஆழ்கடலில் 1000 முதல் 5500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ், கேஸ் ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள் மற்றும் கோபால்ட் போன்ற தாது வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய புவி அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும்.
- மத்சியா 6000 எனப்படும் மனிதருடன் கூடிய இந்த ஆழ்கடல் நீர்மூழ்கி கலன், 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் ஒத்திகையை மேற்கொள்ள தயாராக இருக்கும்.
- ’சமுத்ரயான்’ திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், கடலடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா. ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.