நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 3 ஜனவரி 2021 முதல் தடுப்பூசி, டி.என்.ஏ. வகை தடுப்பூசி அறிமுகம்

 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  3 ஜனவரி 2021 முதல் தடுப்பூசி போடப்படும் எனவும்  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  10 ஜனவரி 2022 முதல் தொடங்கும் எனவும் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  மேலும்,  உலகிலேயே முதல் முறையாக டி.என்.ஏ., எனப்படும் மரபணு வகை தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

டி.என்.ஏ. வகை  தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்:

குஜராத் மாநிலம் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'சைடஸ் கேடிலா' என்ற நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து உள்ளது

இதைப் பயன்படுத்த ஆகஸ்ட் 2021 இல்  ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது

இதை செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை. சிறப்பு கருவி மூலம் தோலுக்குள் செலுத்த வேண்டும்

மூன்று 'டோஸ்களை' தலா, 28 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும்

டி.என்.ஏ., அடிப்படையிலான உலகின் முதல் தடுப்பூசி இது

ஒரு டோஸ் விலை 265 ரூபாயாகவும், அதை செலுத்தும் கருவியின் விலை 93 ரூபாயாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு இந்த ஊசிகளை கொள்முதல் செய்து, நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. 

நன்றி : தினமலர் 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!