Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியா-ரஷியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து - விவரம்

 இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் 6-12-2021 அன்று நடைபெற்றறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் இந்தியா  வருகை புரிந்தார். அதனையொட்டி, ரூ.5,000 கோடி மதிப்பில் ஏகே-203 ரக துப்பாக்கிகளை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சாா்ந்த 4 ஒப்பந்தங்கள் இந்தியா-ரஷியா இடையே கையொப்பமாகின. 

  • உத்தர பிரதேசத்தின் அமேதியில் 6,01,427 ஏகே-203 ரக தாக்குதல் துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கு சுமாா் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய வீரா்கள் பயன்படுத்துவதற்கான இந்தத் துப்பாக்கிகளின் தொழில்நுட்பத்தை ரஷியா பகிா்ந்து கொள்கிறது.  இந்த ஒப்பந்தத்தின் படி , ரஷிய அரசிடம் 2021-31 வரை 6 .01 லட்சம் ஏகே-203 ரக துப்பாக்கிகளை வாங்கவும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் ஏகே-203 ரக தானியங்கித் துப்பாக்கிகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு (2021-2031) நீட்டிப்பதற்கான ஒப்பந்தமும் கூட்டத்தின்போது கையொப்பமானது.
  • ‘கலாஷ்னிகோவ்’ ரக சிறிய ரக ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளுக்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டில் கையொப்பமான ஒப்பந்தத்தில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot