Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

2020ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு மூன்றாம் இடம்

  • நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில், தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதல்பரிசையும், ராஜஸ்தான் இரண்டாம் பரிசையும் பெறுகின்றன.
  •  தென் மாநிலங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் பரிசையும்,  சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3-வது பரிசையும்,  சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பிரிவில், காவேரிப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், புதுச்சேரி,  அமலோற்பவம் லூர்து அகாடமி 2-ம் பரிசையும், புதுச்சேரி மனப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி 3-ம் பரிசையும் பெற உள்ளன. 
  • சிறந்த தொழிற்சாலைகளுக்கான பிரிவில், தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (ஹுண்டாய் கார் தொழிற்சாலை)-க்கு இரண்டாம் பரிசும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா-வுக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot