நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

2022 ஆம் ஆண்டிற்கான அகழ்வாய்வுப் பணிகள் ஏழு இடங்களில் தொடக்கம்

 தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி (Video Conferencing) வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் 11.2.2022 அன்று தொடங்கி வைத்தார்.   இதன் படி பின்வரும் இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்

2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம் 

3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம் - இரண்டாம் கட்டம்

4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் - இரண்டாம் கட்டம்

5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்

6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - முதல் கட்டம் 

7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம் - முதல் கட்டம்

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!