நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

ஆரோக்கிய சேது செயலியுடன், ஆயுஷ்மான் பாரத், 'டிஜிட்டல்' திட்டத்தை ஒருங்கிணைப்பு

 ஆரோக்கிய சேது செயலியுடன், ஆயுஷ்மான் பாரத், 'டிஜிட்டல்' திட்டத்தை ஒருங்கிணைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும், ஆயுஷ்மான் பாரத், 'டிஜிட்டல்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண் தரப்படும்.இதன் வாயிலாக, மக்கள் தங்கள் மருத்துவ ஆவணங்கள், டாக்டர்களின் மருந்து சீட்டு, பரிசோதனை சான்றுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்க முடியும். இந்நிலையில், இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை, ஆரோக்கிய சேது செயலியுடன் மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது. இதன் வாயிலாக, ஆரோக்கிய சேது செயலி பயனாளர்களும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், 14 இலக்க மருத்துவ அடையாள எண்ணை பெற முடியும்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!