Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பேரறிவாளன் விடுதலை - அரசியல் சாசனத்தின் 142ஆவது பிரிவு - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில்  இருந்த பேரறிவாளனை அரசியல் சாசனத்தின் 142ஆவது பிரிவு வழங்கியுள்ள தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது.

142 வது பிரிவு பற்றி ...

உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள விஷயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றம் மூலம் அல்லது எந்த சட்டத்தின் கீழும் பரிந்துரைக்கப்படக்கூடிய வகையில், அதற்கான ஏற்பாடு செய்யப்படும் வரையோ அல்லது குடியரசுத் தலைவர் உத்தரவின்படி பரிந்துரைக்கும் வகையிலோ இந்தியப் பகுதி முழுவதும் அமல்படுத்தப்படலாம்.” என்று சட்டப்பிரிவு 142(1) கூறுகிறது.

எப்போதாவது, உச்ச நீதிமன்றம் இந்த அரசியலமைப்பு விதியை செயல்படுத்துகிறது,

போபால் விஷவாயு துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 470 மில்லியன் டாலர்களை நிவாரணம் பெற்றுத் தந்த, 1989 ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் வழக்கு (போபால் வாயு கசிவு) மற்றும்   2019 அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய வழக்குகளில் 142ஆவது பிரிவை கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் செயல்படுத்தியுள்ளது. தற்போது பேரறிவாளன் வழக்கில் இதே பிரிவை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு சட்ட பிரிவு  161 பற்றி...

v  இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், அரசின் அதிகாரம் நீட்டிக்கப்பட்ட ஒரு விஷயத்துடன் தொடர்புடைய எந்தவொரு சட்டத்திற்கும் எதிரான, எந்தவொரு குற்றத்திற்கும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட எந்தவொரு நபரின் தண்டனையை இடைநிறுத்துதல் அல்லது மாற்றுதல் அல்லது மன்னிப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த வரையறையின்படி, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302ன் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளனை மன்னிக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உண்டு.

v  பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது. இந்திய தண்டனைச் சட்டம் 302 மாநில அரசின் பொது அமைதிக்கு கீழ் வருகிறது. எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது.” என்ற தமிழக அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

v  அதேசமயம், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்குகளில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு தனி உரிமை உண்டு என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :  tamil.samayam.com

பேரறிவாளன் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் :

v  கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

v  அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.

v  161-வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.

v  முடிவெடுக்க கவர்னர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.

v  சுப்ரீம் கோர்ட்டின்  தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.

v  இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

v  பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.

v  பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம்.

நன்றி : தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot