v தமிழ்நாட்டில் 1928-ஆம் ஆண்டு ராயல் கமிஷன்
ஏற்படுத்தப்பட்டு, அதன் பரிந்துரையின் பெயரில்
மெட்ராஸ் வணிகப்பயிர் சட்டம், 1933-ஆம் ஆண்டு
தோற்றுவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக
திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி 1936-ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. பின்னர் விழுப்புரம்
மணிலா மார்க்கெட் கமிட்டி மற்றும் கோவில்பட்டி காட்டன் மார்க்கெட் கமிட்டி
ஆகியவற்றை ஏற்படுத்தி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் நடைமுறைக்கு வந்தன.
v தமிழகத்தில் வேளாண் விளைபொருள்
விற்பனையை முறைப்படுத்திட 1933-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட
சட்டத்திற்குப் பிறகு சமூக பொருளாதாரத் தேவையை கருத்தில் கொண்டு 1959 மற்றும் 1987 –ஆம் ஆண்டுகளில் புதிய
சட்டங்கள் உருவாக்கப்பட்டன, இச்சட்டங்களின் நோக்கம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ஏற்படுத்தப்பட்டவை.
v தமிழ்நாட்டில் விவசாயிகள்
தங்களுடைய வேளாண் விளைபொருளை எந்தவித சிரமமுமின்றி நியாயமான விலைக்கு விற்பனை
செய்து பயனடைய ஏதுவாக 27 விற்பனைக்குழுக்களின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்
தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம், 1987-ல் சட்டம் மற்றும் விதிகள் 1991-இன் படி ஏற்படுத்தப்பட்டு
செயல்பட்டு வருகின்றது.
v 1987-ஆம் வருடத்திய சட்டத்தில்
அவ்வப்போது ஏற்படும் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. அவ்வாறாக மின்னணு சந்தை முறைக்கு அனுமதி அளித்தமை, வணிகர்களின் சிரமத்தினை போக்க
மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் மற்றும் ஒருமுனை மார்க்கெட் கட்டண
வசூலிப்பு உள்ளிட்ட முன்னோடி சீர்திருத்தங்கள் பிப்ரவரி 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.
(தமிழ்நாடு சட்டம்-8,
2017).
v அதன் தொடர்ச்சியாக வேளாண்
விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப,
ஒழுங்குமுறை
விற்பனைக்கூடங்களிலும், இதர வணிக இடங்களிலும் விற்பனை
செய்வதற்கு வழிவகுக்கும் வகையில்
தமிழ்நாடு சட்டம் 31,
2020 இயற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.