தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச் சிலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 28.05.2022 அன்று மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.
கலைஞர்
மு.கருணாநிதி
அவர்களைப் பற்றியய முக்கிய
தகவல்கள் :
v முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் முத்துவேலருக்கும்,
அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
v இளம்
வயதிலேயே ‘மாணவ நேசன்’ என்னும்
கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டு, இளைஞர்களை
ஒன்று திரட்டினார்.
v அதன்
தொடர்ச்சியாக, ‘அனைத்து மாணவர்கள் கழகம்’ என்கிற
அமைப்பினை உருவாக்கி, 1942ஆம் ஆண்டு ‘முரசொலி’ என்னும் துண்டு வெளியீட்டை வெளியிட்டார். 1946 முதல் 1948 வரை முரசொலியை மாத இதழாக நடத்தி
வந்தார். 1960ஆம் ஆண்டு முதல் முரசொலியானது தினசரி
நாளிதழாக வெளியிடப்பட்டது.
v மக்கள்
நலன்காத்திட 1957இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்
போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத் தண்டனையும்
பெற்றவர்.
v கலைஞர்
அவர்கள் 1957இல் முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு
செய்யப்பட்டார். 1957ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற
உறுப்பினராக வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்தார். 1969ஆம் ஆண்டு
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி
ஏற்றார். இதன் தொடர்ச்சியாக 1971, 1989, 1996, 2006ஆம்
ஆண்டுகளில் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி, தாய்த் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம்,
தமிழ்ச் சமுதாய மக்கள் கல்வியிலும், சமூக
நீதியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட பல்வேறு சிறப்பானத்
திட்டங்களை செயல்படுத்தித் தமிழகத்தை இந்தியத் திருநாட்டின் முன்னோடி மாநிலமாகத்
திகழச்செய்தார்.
v தனது
ஆட்சி காலத்தின் போது, குடிசைமாற்று வாரியம்
அமைத்தது, பேருந்துகள் நாட்டுடமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநிலத்
திட்டக்குழு உருவாக்கம், பெண்களுக்கு சொத்துரிமை, வன்னியர் சீர் மரபினர்
மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு
இட ஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, உயர்கல்வித் துறை,
நெடுஞ்சாலைத்துறை, தகவல்
தொழில்நுட்பத்துறை புதிதாக உருவாக்கம்,
உழவர் சந்தை, வரும் முன்காப்போம்
திட்டம், நமக்கு நாமே திட்டம், இலவச
வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம், ரூ.7
ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் அறவே ரத்து, மூவலூர் இராமாமிர்தம்
அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஏழை நடுத்தரக்
குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்,
கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.6000
நிதியுதவி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சத்துணவில் முட்டை
வழங்கும் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெரியார்
நினைவு சமத்துவப்புரம் போன்ற முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தினார்.
v திருக்குறள்
உரை,
சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா, இலக்கிய மறுபடைப்புகள்,
குறளோவியம், சிலப்பதிகாரம், நாடகக் காப்பியம், தாய், பூம்புகார் ஆகியவை கலைஞர் அவர்கள் எழுதிய நூலகளில்
குறிப்பிடத்தக்கவை. தனது வாழ்க்கை
வரலாற்றை தமிழக மக்கள் அறியும் வகையில்
‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் முரசொலி மற்றும் குங்குமம் இதழ்களில் தொடர்
கட்டுரையாக எழுதினார். பின்னர் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆறு பாகங்கள் கொண்ட நூலாக
வெளியிடப்பட்டது. நாடகத் துறையில் சிறந்த
விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனார்கலி, உதயசூரியன்,
உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல்,
காகிதப் பூ, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தூக்குமேடை, நச்சுக் கோப்பை, மணிமகுடம், மகான் பெற்ற மகன், வாழமுடியாதவர்கள் போன்ற
அற்புதமான நாடகங்களை எழுதினார். வரலாற்றுப் புனைவுகளில் ரோமாபுரி பாண்டியன்,
தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி
பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர் போன்ற வரலாற்றுச்
சிறப்புமிக்க புனைவுகளையும், புதினங்களில் அரும்பு,
ரத்தக் கண்ணீர், திராவிட பண்ணை, ஒரே ரத்தம், புதையல், வான்கோழி, சுருளிமலை, வெள்ளிக்கிழமை ஆகிய பல புதினங்களையும், சிறுகதைத்
தொகுதிகளில் ஒரு மரம் பூத்தது, கிழவன் கனவு, நெருப்பு, தாய்மை, நளாயினி,
பழக்கூடை, பிள்ளையோ பிள்ளை, முடியாத தொடர்கதை ஆகிய சிறப்பானத் தொகுதிகளை படைத்தார். கவிதைத்
தொகுதிகளில் அண்ணா கவியரங்கம், கலைஞரின் கவிதைகள்,
கவிதையல்ல, கவிதை மழை, காலப்பேழையும் கவிதைச்
சாவியும், முத்தாரம், வாழ்வெனும்
பாதையில் போன்ற கவிதைத் தொகுதிகளை கலைஞர் அவர்கள்
எழுதியுள்ளார்.
v பகுத்தறிவு
பகலவன் தந்தை பெரியார் அவர்களால், ‘கலைஞர் அவர்களை
அறிவில் சிறந்தவர் என்றும் நிருவாகத்தில் சிறந்தவர் என்றும் பொதுத் தொண்டுக்காக
தியாகம் செய்வதில் சிறந்தவர்’ என்றும் பாராட்டப் பெற்றவர்.
v பேரறிஞர்
அண்ணா அவர்களால், ‘தண்டவாளத்தில் தலைவைத்து படு’ என்று சொன்னாலும், ‘அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்’ என்று சொன்னாலும் இரண்டையும் ஒன்றாகக்
கருதுபவர் என்தம்பி கருணாநிதி’ என்றும், ‘என் தம்பி
பாளையங்கோட்டை தனிமைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு கிடந்த இடம்தான் புனித பூமி’
என்றும் போற்றப்பட்டவர்.
v பேராசிரியர்
அன்பழகன் அவர்களால், ‘எறும்பு போன்ற
சுறுசுறுப்பும் – யானை போன்ற நினைவாற்றலும் - எருது போன்ற ஊக்கமும் – குதிரை போன்ற
விரைவுத் திறனும் ஆகியவை நாட்டை ஆள்பவரிடம் நிரம்ப வேண்டும் எனில் இவை யாவற்றிலும்
முன்னிற்பவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்று போற்றப்பெற்றவர். நன்றி : செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.