Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஜூலை 2022 மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (All-India Consumer Price Index Numbers For Agricultural And Rural Labourers)

 2022,  ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (All-India Consumer Price Index Numbers For Agricultural And Rural Labourers) (அடிப்படை 1986-87=100) 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக உள்ளது. இந்தக் குறியீட்டு உயர்வு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது.  விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை,  20 மாநிலங்களில் 1 புள்ளி முதல் 13 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில், 1301 புள்ளிகளுடன் தமிழகம் பட்டியலில் முதலிடத்திலும், 890 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 முதல் 13 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 942 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.