டாக்டா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது - ச.இஞ்ஞாசிமுத்து
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா
சாவ்லா விருது - பா.எழிலரசி (நாகப்பட்டினம்)
உங்கள் தொகுதியில் முதல்வா் விருது - லட்சுமி பிரியா
முதலமைச்சரின்
நல் ஆளுமை விருது:
திருவள்ளூா்
மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்டு மறுவாழ்வு அளித்த சிறப்பான செயலைப்
பாராட்டி,
அந்த மாவட்ட ஆட்சியருக்கும்
திருநங்கைகளின்
வாழ்வில் நம்பிக்கையூட்டி அவா்களது அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்த பணிகளுக்காக
செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கும்
மழைநீா்
சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திண்டுக்கல் மாவட்டம்,
நீா்நிலைகளை மீட்டுருவாக்கி புனரமைப்பு செய்த பணிகளுக்காக
சிவகங்கை மாவட்டம், கருவுற்ற தாய்மாா்களின் உடல் நலனை
தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கும் தாய்கோ் நெல்லை திட்டத்தை அறிமுகப்படுத்திய
திருநெல்வேலி மாவட்டத்துக்கும்
வேளாண்
இயந்திரங்களை இணையதளம், கைப்பேசி செயலி மூலமாக
ஆன்-லைன் வழியே வாடகைக்கு விடும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக
வேளாண்மைத் துறை தலைமை பொறியியல் துறைக்கும்
மாற்றுத்
திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட
முதியோா்,
பெண்கள் ஆகியோரை காப்பகங்களில் வைத்து பராமரித்தும், உரிமை கோரப்படாத இறந்தோரின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம்
செய்யும் திட்டத்தையும் சென்னை பெருநகர காவல்
ஆணையரகத்துக்கும் நல் ஆளுமை விருது அறிவிப்பு செய்யப்பட்டது.
மகளிா்
நலனுக்காக சிறந்த சேவைகளை ஆற்றியதாக நாகப்பட்டினம்
மாவட்டத்தைச் சோ்ந்த வானவில் அறக்கட்டளை, சிறந்த
சமூக சேவகருக்கான விருது திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.பங்கஜம் ஆகியோருக்கு
அளிக்கப்பட்டது.
சிறந்த
உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள்:
சிறந்த
மாநகராட்சிக்கான விருது
- சேலம்
மாநகராட்சி
சிறந்த
நகராட்சிகள் -
முதலிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா், இரண்டாம் இடத்தில் குடியாத்தம்
மற்றும் மூன்றாம் இடத்தில் தென்காசி
சிறந்த
பேரூராட்சிகள் -
முதலிடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி , இரண்டாம் இடத்தில் கன்னியாகுமரி பேரூராட்சி, மூன்றாம் இடத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி
மாநில
இளைஞா் விருதுகள்
: சிறந்த சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணிப்பேட்டை மாவட்டம்
பி.விஜயகுமாா், நீலகிரி மாவட்டம் எம்.முகமது ஆசிக்,
வேலூா் மாவட்டம் ஜி.ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு மாநில இளைஞா்
விருதுகள் வழங்கப்பட்டது. இதேபோன்று, பெண்கள் பிரிவில் நாகப்பட்டினம்
மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சிவரஞ்சனி விருதினைப் பெற்றாா்.
👉 தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது
ஆர்.நல்லகண்ணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அத்துடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்
சான்றிதழும் வழங்கப்பட்டது.
👉 தமிழக அரசின் அப்துல் கலாம்
விருது பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆய்வு நிறுவன இயக்குனர் இஞ்ஞாசி முத்துக்கு வழங்கப்பட்டது.
👉 தமிழக அரசின் துணிவு மற்றும்
சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது எழிலரசிக்கு
வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.