“மத்சய சேது” செயலியில் (“Matsya Setu” app) இணைய வழி மீன் சந்தை தொடக்கம்

TNPSCPortal.In

 “மத்சய சேது” செயலியில் (“Matsya Setu” app) இணைய வழி மீன் சந்தைக்கான சிறப்பு பகுதியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா  19.8.2022 அன்று தொடங்கிவைத்தார். பிரதமரின் மத்சய சம்படா  திட்டத்தின் மூலம் ஹைதராபாதில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் புவனேஸ்வரியில் உள்ள ஐசிஏஆர் – சிஐஎஃப் ஏ மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டது. மீன் குஞ்சுகள், தீவனம், மருந்துகள் போன்ற   இடுப்பொருள்களுக்கான ஆதாரங்களை அறியவும், மீன்வளர்ப்புக்கு தேவையான சேவைகளை அறியவும், மீன்வளர்ப்போர் மற்றும்  இதனோடு தொடர்புடையவர்களுக்கு இணைய வழி சந்தை உதவும்.  மேலும் மீனவர்கள் தங்களின் மீன்களை விற்பனைக்கும் இதில் பட்டியலிடலாம். மீன்வளர்ப்பு துறைகளில் உள்ள அனைவரையும், ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top