நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (Tamil Nadu Credit Guarantee Scheme (TNCGS)) மற்றும் தமிழ்நாடு வர்த்தக வரவுத் தள்ளுபடி அமைப்பு (Tamil Nadu Trade Receivables Discounting System (TN TReDS)) தொடக்கம்

 திருப்பூரில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் மண்டல மாநாட்டில்,  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (Micro, Small and Medium Enterprises (MSMEs)) தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (Tamil Nadu Credit Guarantee Scheme (TNCGS)) மற்றும் தமிழ்நாடு வர்த்தக வரவுத் தள்ளுபடி அமைப்பு (Tamil Nadu Trade Receivables Discounting System (TN TReDS)) ஆகியவற்றை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 26.8.2022 அன்று தொடங்கி வைத்தார்.

v  தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (Tamil Nadu Credit Guarantee Scheme (TNCGS)) மத்திய அரசின் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளையுடன் ( Credit Guarantee Trust for Micro and Small Enterprises (CGTMSE)) செயல்படும் மற்றும் ₹40 லட்சம் வரையிலான தகுதியுள்ள கடன்களுக்கு 90% உத்தரவாதத்தை வழங்கும்.

v  ₹40 லட்சத்திற்கு மேல் மற்றும் ₹2 கோடிக்கும் குறைவான கடன்களுக்கு, தகுதியான கடன்களுக்கு 80% உத்தரவாதம் கிடைக்கும்.

v  இத்திட்டத்திற்காக மாநில அரசு ₹100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.   

v  இந்த திட்டத்தின் மூலம் தொழில்களுக்கு நிதி வசதியினைப் பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

v  இந்த திட்டத்தின் சிறப்பம்சமானது, பொதுவாக வங்கிக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வழியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைவதால் கடன் விண்ணப்பப் பரிசீலனை செய்யும் நேரம் குறைக்க வழிவகை செய்யப்படும். தாட்கோ வங்கியிலிருந்து கடன் பெறவிருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

v  மேலும், இதன் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் "தரமதிப்பீடு" (Credit score) நிறுவனங்களின் 'கடந்த கால கடனை திருப்பி செலுத்திய காரணி (CIBIL score)' மட்டுமல்லாமல் இதர நிதிநிலை செயல்பாடுகளையும் கொண்டு இணையதளம் வாயிலாகவே செயல்படுத்தப்பட இருக்கிறது.

v  இத்தரமதிப்பீடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். வங்கிகள் / நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

v  இவ்வாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு என அறிவிக்கப்பட்ட மேற்கண்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியாவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!