Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

10,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 10,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் 15.11.2022 அன்று தொடங்கிவைத்தார்.  ஆண்டுதோறும்  10,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு 2.40 கோடி ரூபாய்க்கான வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் 10,000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 இலட்சம் ரூபாய் வரை வீட்டுவசதித் திட்ட நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot