Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

15 நவம்பர் 2022 அன்று உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரிப்பு

15 நவம்பர் 2022 அன்று உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. எனினும் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா சில ஆண்டுகளில் மிஞ்சிவிடும் என்றும் கூறப்படுகிறது.

உலகின் மக்கள் தொகை 1974 இல் 400 கோடியாக இருந்த நிலையில், 48 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
1974 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையின் இடைநிலை வயது ( median age) 20.6 ஆண்டுகள், அதாவது உலகின் பாதி பேர் 22.2 வயதுக்கு குறைவானவர்கள், மற்ற பாதி அந்த வயதை விட வயதானவர்கள். தற்போதைய உலகளாவிய இடைநிலை வயது ( median age) 30.5 ஆண்டுகள்.

நன்றி : இந்து தமிழ் திசை, Times of India 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot