ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, ’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே கலாச்சாரம்; (One Earth, One Family, One Culture) எனப்பொருள் படும் ‘வாசுதெய்வ குதும்பகம்’ (“Vasudhaiva Kutumbakam,”) என்பதான கருப்பொருள் மற்றும் இணையதளத்தை (www.g20.in) பிரதமர் மோடி அவர்கள் 8.11.2022 அன்று காணொளி காட்சி மூலம் வெளியிட்டார்.
2022 டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளது.
இந்த கருப்பொருளானது, “மேக உபனஷிட்” (Maha Upanishad) என்ற பழங்கால சமஸ்கிருத நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி-20 உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.