மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020- 21ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டை (Performance Grading Index for States/UTs for the year 2020-21) 3.11.2022 அன்று வெளியிட்டது.
வெளிப்பாடுகள், ஆளுகை மேலாண்மை ஆகிய இரண்டு பிரிவின்கீழ் 70 குறியீடுகளில் 1000 புள்ளிகள் அடங்கியதாக இந்த குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகள் மேலும் ஐந்து முக்கிய துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளின் குறியீடுகளைப் போலவே, 2020-21 குறியீட்டிலும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 10 வரிசைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1000 புள்ளிகளில் 950-க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் நிலை 1 என்ற உயரிய மதிப்பைப் பெற்றுள்ளன. 551க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் 10-வது நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த செயல்பாட்டு வரிசை குறியீட்டின்படி தமிழகம், புதுவை ஆகியவை முறையே 855 மற்றும் 897 புள்ளிகளோடு மூன்றாவது நிலையில் உள்ளன. கற்றல் வெளிப்பாடுகள் பிரிவில் 132 புள்ளிகளையும், அணுகல் என்ற பிரிவில் 78 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு & வசதிகளில் 131 புள்ளிகளையும், சமத்துவம் என்ற பிரிவில் 183 புள்ளிகளையும், ஆளுகை நடைமுறை என்ற பிரிவில் அதிகபட்சமாக 331 புள்ளிகளையும் தமிழகம் பெற்றுள்ளது. புதுச்சேரிக்கு கற்றல் வெளிப்பாடுகளில் 124 புள்ளிகளும், அணுகலில் 76 புள்ளிகளும், உள்கட்டமைப்பு & வசதிகளில் 134 புள்ளிகளும், சமத்துவப் பிரிவில் 220 புள்ளிகளும், ஆளுகை நடைமுறையில் 343 புள்ளிகளும் கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.