Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்திய நகர்ப்புற போக்குவரத்து கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, 2022 (Urban Mobility India (UMI) Conference & Expo 2022)

 இந்திய நகர்ப்புற போக்குவரத்து கருத்தரங்கு  மற்றும் கண்காட்சி, 2022  (Urban Mobility India (UMI) Conference & Expo 2022) நவம்பர் 4 முதல் 6 வரை கொச்சியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கேரள மாநில அரசுடன் இணைந்து நடத்துகிறது.

கூ.தக. : நகர்ப்புற போக்குவரத்து சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநில மற்றும் நகர அளவுகளில் திறன் கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான வழிமுறைகளை அமைப்பதற்காக தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை 2006 (National Urban Transport Policy (NUTP), 2006) -ஐ இந்திய அரசு கொண்டு வந்தது. இதை அடுத்து இந்த கொள்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய நகர்ப்புற போக்குவரத்து என்ற பெயரில் வருடந்தோறும் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot