ஆசியான்-இந்தியா இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு கூடுதல் பங்களிப்பாக 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை (ரூ.40 கோடி) இந்திய அரசு அறிவித்துள்ளது. ‘இந்தியாவின் கூடுதல் பங்களிப்பு வாயிலாக பொது சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நவீன வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஆசியான் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேம்படும்.
கூ.தக. : தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations) 8 ஆகஸ்ட், 1967 அன்று பாங்காக்கில் (தாய்லாந்து) தொடங்கப்பட்டது. ஜகார்த்தா (இந்தோனேஷியா) நகரில் தலைமையிடத்தைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.