முக்கிய தினங்கள் டிசம்பர் 2022

TNPSCPortal.In

சிறுபான்மையினர் உரிமை தினம் (Minority Rights Day) - டிசம்பர் 18


விஜய் திவாஸ்  ( 1971ம் ஆண்டு  போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றி கொண்ட தினம்) - டிசம்பர் 16 தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day) - டிசம்பர் 14 


சர்வதேச மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10 

கூ.தக. :   1948-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (United Nation General Assembly) பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட தினமான டிசம்பர் 10,   மனித உரிமைகள் தினமாக   கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 28.09.1993 அன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின், சட்டப்பிரிவு 3, 21-ன் கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றியத்திலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநிலத்திலும் நிறுவப்பட்டன. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட பல மாநிலங்களில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் 17.04.1997 முதல் செயல்பட்டுவருகிறது.  


 அனைவருக்கும் சுகாதார சேவைகள் தினம் (Universal Health Coverage (UHC) Day) - டிசம்பர் 10  


சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) -  டிசம்பர் 9


தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சாசன தினம் (South Asian Association for Regional Cooperation (SAARC) Charter Day)  - டிசம்பர் 8 

கூ.தக. :  வங்கதேசத்தின் டாக்காவில் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி சார்க் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் வகையில் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான சாசன  தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது.  சார்க் அமைப்பின்  செயலகம் காத்மாண்டில் உள்ளது. 


ஆயுதப்படைகள் கொடி தினம் (Armed Forces Flag Day) - டிசம்பர் 7 


பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வ தினம்  (International Volunteer Day for Economic and Social Development)   – டிசம்பர்  5


சர்வதேச வங்கிகளின்  தினம் ( International Day of Banks)    – டிசம்பர்  4

Maharashtra Becomes First State to Set up Separate Divyang department


சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் - டிசம்பர் 6  (அம்பேத்கர் அவர்கள் 14 ஏப்ரல் 1891 -ல்  மாவ் எனுமிடத்தில் ( தற்போதைய மத்தியபிரதேசத்தில் ) பிறந்தார்.  6 டிசம்பர் 1956 -ல் புது தில்லியில்  காலமானார்.) 

----------------------------

எல்லைப் பாதுகாப்புப் படை தினம் (Border Security Force (BSF) Raising Day today)  - டிசம்பர் 1 

கூ.தக. : எல்லைப் பாதுகாப்புப் படை   1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. 

-----

உலக மண் தினம்  - டிசம்பர் 5 

-------------


கடற்படை தினம் (Navy Day (India))  - டிசம்பர் 4 

கூ.தக. :  1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது,  டிசம்பர் 4 அன்று  “ஆபரேஷன் ட்ரைடென்ட்டின்” (Operation Trident)  மூலம் , இந்திய  கடற்படை,    PNS கைபர் உட்பட நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்தது, நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த வெற்றியின் நினைவாக டிசம்பர் 4 கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், 1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்களும் நினைவுகூரப்படுகின்றனர்.

----------------


சர்வதேச சிறுத்தைகள் தினம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தினம் (International Cheetah Day and Wildlife Conservation Day) - டிசம்பர் 4 


-----------

 "உலக எய்ட்ஸ் தினம்” - டிசம்பர் 1 |  2022 ஆம்  ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் "சமப்படுத்துதல்" என்பதாகும். 

கூ.தக. : எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை மாநில அரசும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் செயல்படுத்தியதால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.24 விழுக்காட்டைவிடக் குறைவானதாகும். எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, புதிய எச்.ஐ.வி. தொற்றினைக் கண்டறிய 2,090 நம்பிக்கை மையங்களின் மூலம், எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்துக் கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் வாயிலாகக் கண்காணிக்கப்படுகிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்திட முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை 2009-ஆம் ஆண்டு ஐந்து கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு இத்திட்டங்களுக்காக இதுவரை 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அந்நிதியிலிருந்து பெறப்படும் வட்டித்தொகையின் மூலமாக ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏறத்தாழ 3,200 குழந்தைகள் பயன் பெற்றுள்ளார்கள். இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடி திட்டமாகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

-----------


 உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day)  – டிசம்பர் 2

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் (National Pollution Control Day) – டிசம்பர் 2

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Abolition of Slavery) – டிசம்பர் 2


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top