உயிர் நீர் இயக்கத்தின் (ஜல்ஜீவன் இயக்கம்) கீழ் திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடி மத்திப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தேவையான நீரை கொசஸ்தலையாற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் நாள்தோறும் 2.76 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு இக்குடியிருப்புபகுதிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 0.42 இலட்சம் மக்கள் பயன்பெறுவதுடன் செயல்பாட்டுடன் நீடித்த நிலைப்பாடு கொண்ட புதிய 255 குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தாமிரபரணி நீர் ஆதாரத்தைக் கொண்டு, நீர் எடுப்பு கிணறு மூலம் நீர் எடுக்கப்பட்டு சேதுராமலிங்கபுரத்தில் நிறுவப்படவுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.05 இலட்சம் மக்கள் பயன்பெறுவதுடன் புதிதாக 92,407 எண்ணிக்கையிலான செயல்பாட்டுடன் நீடித்த நிலைப்பாடு கொண்ட குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.