Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

முக்கிய தினங்கள் - செப்டம்பர் 2023

சைகை மொழி தினம் (Sign Language Day) - செப்டம்பர் 23  


சர்வதேச காது கேளாதோர் வாரம் (International Week of the Deaf) -  2023 செப்டம்பர் 18 முதல்  24 வரையில் அனுசரிக்கப்படுகிறது. 


சமூகநீதி நாள் (Social Justice Day) (பெரியாரின் பிறந்த தினம்)   - செப்டம்பர் 17 

(தந்தை பெரியார் பிறந்த நாள் - 17 செப்டம்பர் 1879 - இவ்வாண்டு தந்தை பெரியார் அவர்களின் 145- ஆவது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது) 


சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினம் (International Coastal Clean-up Day – 2023)  - செப்டம்பர் 16 


உலக ஓஷோன் தினம் (World Ozone Day )  - செப்டம்பர் 16 

கூ.தக. :  1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று நடைமுறைக்கு வந்த ஓசோன் சிதைவை ஏற்படுத்தும் பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமான மாண்ட்ரீல் நெறிமுறையில் கையெழுத்திட்டதன் நினைவாக  உலக ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓசோன் படலத்தின் சிதைவு மற்றும் அதைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட/ எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவது இதன் நோக்கமாகும்.



தேசிய பொறியாளர்கள் தினம் - செப்டம்பர் 15 (இந்தியாவின் பழம்பெரும் பொறியாளர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனுசரிக்கப்படுகிறது.)


ஐக்கிய நாடுகள் சபை  சர்வதேச ஜனநாயக தினம் - செப்டம்பர் 15

கூ.தக. :  'அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல்' என்பது 2023 ஆம்  ஆண்டுக்கான சர்வதேச ஜனநாயக தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா 15 செப்டம்பர் 2023 அன்று அனுசரிக்கப்பட்டது. (காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை அவர்கள் 15 செப்டம்பர், 1909 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார். ) 


மக்களிடையே லஞ்சத்தின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம்’ கடைப்பிடிக்கப்படும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

கூ.தக. : ஒவ்வொரு ஆண்டும் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி (அக்.31), அந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.



மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் 11.9.2023 அன்று அனுசரிக்கப்பட்டது.  (11 டிசம்பர், 1882 இல் பிறந்தார்) 


ஐக்கிய நாடுகள் சபை  சர்வதேச ஜனநாயக தினம் - செப்டம்பர் 15

கூ.தக. :  'அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல்' என்பது 2023 ஆம்  ஆண்டுக்கான சர்வதேச ஜனநாயக தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா 15 செப்டம்பர் 2023 அன்று அனுசரிக்கப்பட்டது. (காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை அவர்கள் 15 செப்டம்பர், 1909 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார். ) 

மக்களிடையே லஞ்சத்தின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம்’ கடைப்பிடிக்கப்படும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

கூ.தக. : ஒவ்வொரு ஆண்டும் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி (அக்.31), அந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


உலக பிசியோதெரபி தினம் / இயன்முறை மருத்துவ தினம்  (World Physiotherapy Day)    - செப்டம்பர் 8 


ஐக்கிய நாடுகளின் (UN) சர்வதேச தொண்டு நாள்  (United Nations (UN) International Day of Charity)  - செப்டம்பர் 5 


தேசிய ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5  

கூ.தக. :

  • இந்தியாவில் இரண்டாவது குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1917 இல் 'ரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்' என்ற புத்தகத்தை எழுதினார். 
  • 1931 முதல் 1936 வரை ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், மதன் மோகன் மாளவியாவுக்குப் பிறகு 1939 இல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
  • 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக பணியாற்றினார்.
  • ராதாகிருஷ்ணன் 1909 இல், சென்னையின் பிரசிடென்சி கல்லூரியிலும் 1921 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் கற்பித்தார். அவருக்கு 1954 இல் இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருது பாரத ரத்னா வழங்கப்பட்டது. 
  • 1963 இல் பிரிட்டிஷ் ராயல் ஆர்டர் ஆஃப் மெரிட்டின் கௌரவ உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார்.

கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் அவர்களின் 152-வது பிறந்த நாள்  5.9.2023 அன்று அனுசரிக்கப்பட்டது. 

உலக தேங்காய் தினம் (World Coconut Day)  - செப்டம்பர் 2 


மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள் 1.9.2023 அன்று அனுசரிக்கப்பட்டது.


தேசிய எழுத்தறிவு வாரம் :  செப்டம்பர் 1- 8 

தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு இணங்க 2022-27 ஆம் நிதியாண்டில் செயல்படுத்த அனைவருக்கும் கல்வி (முன்னர் வயது வந்தோர் கல்வி என்று அழைக்கப்பட்டது) திட்டம் (யு.எல்.எல்.ஏ.எஸ்- நவ பாரத் சாக்‌ஷர்தா காரியக்ரம் (ULLAS- Nav Bharat Saaksharta Karyakram) (Education for All)) குறித்த  விழிப்புணர்வை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 8 செப்டம்பர் 2023 அன்று சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு 2023 செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 8வரை எழுத்தறிவு வாரம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


செப்டம்பர் மாதம்  இந்திய அரசினால் ’போஷன் மாதம்’ / ‘ஊட்டச்சத்து மாதம்’  (“PoshanMaah” / Nutrition Month)   என அனுசரிக்கப்படுகிறது. 

தேசிய ஊட்டச்சத்து வாரம்  (National Nutrition Week) 1-7 செப்டம்பர்  தினங்களில் அனுசரிக்கப்படுகிறது. 

கூ.தக. : ஊட்டச்சத்து குறைபாடற்ற  இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் ‘போஷன் அபியான்’ (POSHAN Abhiyaan) எனப்படும் ‘தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை’ பிரதமர் மோடி அவர்கள் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜீஞ்ஜினு ( Jhunjhunu ) எனுமிடத்தில் 8 மார்ச் 2018 அன்று தொடங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot