ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வாலா’ திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த 3 ஆண்டுகளில், கூடுதலாக 75 லட்சம் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை விடுவிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
கூ.தக. : வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.