நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

இந்தியாவில் விற்கப்படும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் இணையதளத்தின் தரவுகளின்படி, 2023 ஆம்  நிதியாண்டில் செப்டம்பர் 2023 வரையில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களின்  மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1 மில்லியன் (10,00,000) மின் வாகனங்களில், 400,000க்கும் அதிகமான மின் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையங்களில் இருந்து முறையே 175,608 யூனிட்கள் மற்றும் 112,949 யூனிட்களை விற்ற ஓலா எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட பத்து நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஆகியவை முக்கிய வகை வாகனங்களாகும்.

  • ஜனவரி 2023 இல் தமிழ்நாடு அரசு, மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 
  • சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய ஐந்து நகரங்களை மின்சார வாகன மையங்களாக மேம்படுத்துவதாகும்.
  • இந்த கொள்கையின்படி, புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் விரிவாக்கத்தை விரும்புபவர்கள் SGST, விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், மூலதனம் மற்றும் மேம்பட்ட வேதியியல் செல் மானியங்கள் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகன உற்பத்தித் துறையில் ₹50,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. 
  • 2030 ஆம் ஆண்டளவில், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களில் 30% உற்பத்தி செய்து, உலகளாவிய ஏற்றுமதியில் கணிசமான பங்களிப்பை வழங்குவதை தமிழ்நாடு இலக்காகக் கொண்டுள்ளது.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!