Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC நடப்பு நிகழ்வுகள் 6-8 மே 2025

 

Tamil Nadu (Unit V)  

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா். 

  • மேலும், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கெளடா மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தா் ஆகிய இருவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி கொலீஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவா் உத்தரவிட்டுள்ளார். 

  • சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் இந்த மாதத்தில் ஓய்வு பெறுவதன் காரணமாக, நீதிபதிகளின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் (வயது 56) மாரடைப்பு காரணமாக காலமானார்.  


பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காா்ல் மாா்க்ஸின் சிலை  கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கப்படவுள்ளது.


தமிழ்நாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு :  

  • நிலையான வளர்ச்சி இலக்கான 16 குறியீடுகளில், ஒன்பதில் பின்தங்கியிருக்கும் இந்தியா, உலகளவில், 167 நாடுகளில் 109வது இடத்தைப் பிடித்துள்ளது.

  • எனினும், இந்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் நாட்டின் சராசரியான 71-ஐ விடவும் அதிக புள்ளிகள் பெற்று தமிழ்நாடு, நமது நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் கேரளம் உள்ளது.

  • 16 நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDGs) ஒன்பதில் இந்தியா பின்தங்கியுள்ளது, உலகளாவிய சராசரியை விட பின்தங்கியிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்தமாக 167 நாடுகளில் 109 வது இடத்தைப்பிடித்திருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

  • இந்த அறிக்கையில், தமிழகம் 78 புள்ளிகளுடன் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒப்பீட்டளவில், முதலிடத்தில் இருக்கும் கேரளம் சிறிய மாநிலம் என்பதால், நாட்டில் மிக முக்கிய இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

  • சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை அடிப்படையாக வைத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை, நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு மதிப்பிட்டுள்ளது.

  • இந்தியாவின் ஒட்டுமொத்த புள்ளிகள் 71 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தின் குறியீடு 78 ஆக உள்ளது. கடந்த 2020 - 21ஆம் ஆண்டுக்கான நாட்டின் குறியீடு 66 ஆக இருந்த நிலையில், இது முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், ஒட்டுமொத்தப் பட்டியலில் இந்தியா 109வது இடத்தையே பிடித்திருக்கிறது.

  • நிலையான வளர்ச்சி இலக்குகளில் 108 குறியீடுகளில் 19-ல் தமிழகம் பின்தங்கியிருக்கிறது. குறிப்பாக எஸ்டிஜி 5 (பாலின சமத்துவம்), எஸ்டிஜி 3 (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு), எஸ்டிஜி 4 (தரமான கல்வி), மற்றும் எஸ்டிஜி 9 (தொழில், புத்தாக்கம், உள்கட்டமைப்பு) ஆகியவை தமிழகம் பின்தங்கியிருக்கும் ஒருசில குறியீடுகளாகும்.

  • எஸ்டிஜி 5 இல், தமிழகம் 50-64 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதாவது, 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற பாலின விகிதம் தேசிய தரவுடன் பொருந்துகிறது.

  • அதே வேளையில் எஸ்டிஜி 11 மற்றும் எஸ்டிஜி 15 ஆகியவை நகர்ப்புற சிக்கல்கள் மற்றும் பலவீனமான காடு வளர்ப்பு போன்றவற்றில் தேசிய சராசரியை விட தமிழகம் குறைவாகவே புள்ளிகளைப் பெற்றுள்ளது.

  • நாட்டில், பிகார் 57 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் கேரளம், உத்தரகண்ட் 79 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன. தமிழகம் 78 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

  • கேரளத்தை எடுத்துக்கொண்டால் எஸ்டிஜி 3 (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு)-ல் 82 புள்ளிகளையும், எஸ்டிஜி 4 (தரமான கல்வி)-ல் 80 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அதுபோல பிகார் எஸ்டிஜி - 1ல் வெறும் 34 புள்ளிகளையும் இரண்டில் 40 புள்ளிகளையும் மட்டுமே பெற்றுள்ளது.

  • தமிழகம் 78 புள்ளிகளைப் பெற்றிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம் 64 புள்ளிகளையும் குஜராத் 67 புள்ளிகளையும் பெற்றிருப்பதன் மூலம், இவை 30 - 43 சதவீத குறியீடுகளில் 50க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருப்பது தெரிய வருகிறது.

  • அதுபோல, தமிழகம் தரமான குடிநீரிலும் (எஸ்டிஜி6), காற்று மாசுபாடு (எஸ்டிஜி 11) போன்றவற்றிலும் பின்தங்கியிருப்பதையும் காட்டுகிறது.

  • இந்தியா எஸ்டிஜி 5-ல் (பாலின சமத்துவம்) பலவீனமாக உள்ளது. இதன் கீழ் இருக்கும் எட்டு அளவீடுகளிலும் இந்தியா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் இன்னமும் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற விகிதமே நீடிக்கிறது. திருமணமான பெண்களில் 29.2 சதவீதம் பேர் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்கள், 13.96 சதவீதம் பெண்கள்தான் சொந்தமாக சொத்து வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது.

நன்றி : தினமணி


"திரு" குறும்படம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட  "திரு" என்ற குறும்படம் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில்  தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.இந்த குறும்படம் திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதனை தூத்துக்குடியைச் சேர்ந்த அருந்ததி அரசு இயக்கியுள்ளார்.



"பாரத் சஞ்சீவனி" செயலி : தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளார்கள் தங்கள் கறவைகளுக்கு தேவையான அவசர கால சிகிச்சை உதவிகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற கட்டணமில்லா

தொலைபேசி எண்ணுடன் கூடிய "பாரத் சஞ்சீவனி" என்ற செயலியை பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். 


தமிழ்நாடு அரசின் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் 

  • 2023-24  நிதியாண்டில் 76,871 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4,875 கோடி அளவிலான சுய உதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.  

  •  2024-25-ஆம் ஆண்டில், 53,757 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4,063 கோடி அளவிலான சுய உதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Source: Policy Note 2025 - 2026


THE MODERN DRAVIDIAN ICON புத்தகம் வெளியீடு :  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசின் நான்காண்டு நிறைவு விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 50 ஆண்டுகால அரசியல் & பொது வாழ்வை குறிப்பிடும் வண்ணம் The Week இதழ் தயாரித்துள்ள ”THE MODERN DRAVIDIAN ICON” எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 


“ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்" அவர்களின் 211-வது பிறந்த நாள் 07.05.2025 அன்று அனுசரிக்கப்பட்டது.  கால்டுவெல் அவர்கள் 7 மே 1814 அன்று அயர்லாந்து நாட்டில் பிறந்தார்.  

  • தமிழ் முதலிய திராவிட மொழிகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவித் தமிழ் மொழியின் தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் இவரைச் சாரும். சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் உண்டு என்றதோடு தமிழில் சமஸ்கிருதமும், பிற இந்திய-ஆரிய மொழிகள் பலவும் கூடச் சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்று அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் (1856) காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.

  • அவரது உடல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடியில்  அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

  • தமிழறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் சிலை சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, 02.01.1968 அன்று மேலவைத் தலைவராக இருந்த திரு.எம்.ஏ.மாணிக்கவேலர் அவர்கள் தலைமையில் பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் அவர்களால் திறக்கப்பட்டது. டாக்டர் இராபர்ட் கால்டுவெல் சிலையினைத் தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கினர்.

தமிழ்நாடு வளர்ச்சி மாதிரி

  • தமிழ்நாட்டின் சேவைத் துறை பலவகையானது, இதில் வணிகம், பழுதுபார்ப்பு, உணவகங்கள் மற்றும் விடுதிகள், போக்குவரத்து, சேமிப்பு, தகவல் தொடர்பு, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் (Real Estate) மற்றும் பல உள்ளன.

  • இந்த மாநிலம் குறிப்பாக அதன் ஆற்றல்மிக்க தகவல் தொழில்நுட்பம் (IT - Information Technology) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், கல்வி, மருத்துவம், நிதி, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு தொழில்களுக்காக பெயர் பெற்றது.

  • வேகமாக நகரமயமாக்கல் (Urbanization) ஏற்படுவதால், போக்குவரத்து, வீட்டு வசதி, துப்புரவு மற்றும் பயன்பாட்டு சேவைகள் (Utilities) போன்ற உள்கட்டமைப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிக்கிறது.

  • 2023-24 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்புற தொழிலாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் வேலை செய்தனர், இது தேசிய சராசரியான 58.07% உடன் நெருக்கமாக உள்ளது. அவர்களில், 16.28% பேர் வணிகம் மற்றும் மோட்டார் வாகன பழுதுபார்ப்பில், 7.53% பேர் போக்குவரத்து மற்றும் சேமிப்பு (transport and storage) துறையில், 6.28% பேர் தகவல் மற்றும் தொடர்பு (Information and Communication) துறையில், 5% பேர் கல்வியில், 4.86% பேர் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளில், 2.84% பேர் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளில் (Financial and Insurance Services), மற்றும் 11.84% பேர் பிற சேவைகளில் ஈடுபட்டனர்.

Source: தமிழ்நாடு பொருளாதார ஆய்வு 2024-25 (Economic Survey of Tamil Nadu 2024-25)


India (Unit III) 

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்  வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டது. 

  • விரைவில் இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிடும்.தற்போது உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவும், 6-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனும் இந்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நிறைவு செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  • மேலும், ஒரே வருமானத்தின் மீது இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிக்கு விலக்கு அளிக்கும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்த (இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்) பேச்சுவாா்த்தையும் நிறைவடைந்ததாக பிரதமா் தெரிவித்தாா்.

  • இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த 2022, ஜனவரியில் தொடங்கிய இந்தப் பேச்சுவாா்த்தை 14 கட்டங்களாக நடைபெற்று வந்தது.

சிறப்பம்சங்கள்

  • பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் 99 சதவீத பொருள்கள், அங்கு வரி விதிக்கப்படாததால் பலனடையவுள்ளன.

  • இந்திய இறக்குமதி வரி குறையும். முதல் கட்டமாக 90 சதவீத பொருள்களுக்கு வரி குறையும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இவற்றில் 85 சதவீத பொருள்களுக்கு வரி முழுமையாக நீக்கப்படும்.

  • இந்தியாவின் ஜவுளி, ஆபரணங்கள், ரத்தினங்கள், நெகிழி, கனிமம், ரசாயனம், ரப்பா், காகிதம், செராமிக், கண்ணாடி, மின் இயந்திரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றுக்கும் முழுமையான வரி விலக்கு கிடைக்கும்.

  • வாகனப் பொருள்களுக்கு 100 சதவீதத்துக்கு மேல் விதிக்கப்படும் வரி 10 சதவீதமாக குறையும்.

  • இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தக மதிப்பு தற்போது ரூ.1.79 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

  • மதுபானங்களின் மீதான வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வரி 40 சதவீதமாக குறையும்.

நன்றி : தினமணி


‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் ஆகிய தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து துல்லியமான தாக்குதலை வெற்றிகரமாக இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.  ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் 130-ஆவது இடத்தில் இந்தியா : 

  •  ”தேர்வு செய்ய வேண்டிய விஷயம்: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மக்கள் மற்றும் சாத்தியக்கூறுகள்”  (A Matter of Choice: People and Possibilities in the Age of AI) என்ற தலைப்பில் ஐ.நா. வளா்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)) மூலம் 6.5.2025 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

  • ஐ.நா. வளா்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)மூலம் 6.5.2025 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

  •  2022ல் 0.676 ஆக இருந்த மனித மேம்பாட்டு குறியீட்டு மதிப்பு 2023ல் 0.685 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியா நடுத்தர மனித மேம்பாட்டுப் பிரிவில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உயர் மனித மேம்பாட்டுக்கான (HDI >= 0.700) வரம்பையும் நெருங்கி வருகிறது.

  • மக்களின் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, கல்வி பெறும் நிலை, வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து, நாடுகளின் மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலை ஐ.நா. வளா்ச்சித் திட்டம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

  • தற்போது வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 0.685 புள்ளிகளுடன் 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

  • சமத்துவமின்மை இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பை 30.7 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது தெற்காசிய பிராந்தியத்தில் அதிகபட்ச இழப்புகளில் ஒன்றாகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • சுகாதாரம் மற்றும் கல்வி சமத்துவமின்மை மேம்பட்டிருந்தாலும், வருமானம் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை. தொழிலாளா் பங்களிப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெண்கள் பின்தங்கியுள்ளனா்.

  • எனினும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் மாற்றத்திற்கான உறுதியை அளிக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சராசரி ஆயுள்காலம் அதிகரிப்பு: இந்தியாவில் மனித சராசரி ஆயுள்காலம் 71.7 ஆண்டுகளில் இருந்து 72.0 ஆண்டுகளாக சற்று அதிகரித்துள்ளது. இது குறியீட்டின் வரலாற்றில் பதிவான இந்தியாவின் அதிகபட்ச அளவாகும். இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டங்கள் இந்தச் சாதனைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன.

  • தனிநபா் வருமானம் உயா்வு: இந்தியாவின் தேசிய தனிநபா் வருமானம், நாட்டின் தற்போதைய பொருளாதார வளா்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் 8,475.68 டாலரிலிருந்து 9,046.76- ஆக உயா்ந்துள்ளது.

  • இந்தியாவின் வளா்ச்சி: இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 1990-ஆம் ஆண்டு முதல் 53 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியா உலகளாவிய மற்றும் தெற்காசிய சராசரிகளைவிட வேகமாக வளா்ந்து வருகிறது.

  • 1990-இல் 58.6 ஆண்டுகளாக இருந்த மனித சராசரி ஆயுள்காலம் 2023-இல் 72 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக, இந்தியாவின் தேசிய தனிநபா் வருமானம் 1990-இன் 2,167.22 டாலரிலிருந்து 2023-இல் 9,046.76-ஆக நான்கு மடங்கு உயா்ந்துள்ளது.


மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ)  இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் 25 மே 2025 அன்று நிறைவடைய உள்ள நிலையில் அவரின் பதவிகாலத்தை மேலும் ஓராண்டுக்கு  நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


ஈரான் வெளியுறவு அமைச்சர் திரு அப்பாஸ் அரக்ச்சி மே 8, 2025 அன்று  குடியரசுத்  தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.


கலாச்சார அமைச்சகத்தின் தலையீட்டை தொடர்ந்து பிப்ரஹ்வா புத்த சின்னங்களின் ஏலத்தை சோத்பி’ஸ் ஹாங்காங் ஒத்திவைத்துள்ளது. 

  • 1898-ம் ஆண்டு வில்லியம் கிளாக்ஸ்டன் பெப்பே என்பவரால் பிப்ரவா என்ற இடத்தில் அகழாய்வு செய்து  கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புத்தரின் எலும்பு துண்டுகள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களில் பலவும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டன. 

  • ஒரு சிலப் பொருட்கள் சியாம் அரசருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், சில ரத்தினங்கள் வில்லியம் கிளாக்ஸ்டன் பெப்பேயின் கொள்ளுப் பேரன் கிறிஸ் பெப்பே இடம் இருந்தன. இவை எல்லாம் ஏலப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

  •  2025 மே 2 அன்று  இந்தியத் தொல்பொருள் ஆய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் இந்த ஏலத்தை உடனடியாக நிறுத்துமாறு ஹாங்காங்கின் கான்சுலேட் ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். அதே நாளில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த பிரச்சனையை பிரிட்டனின் கலாச்சாரத் துறை அமைச்சர் லிசா நந்தியிடம் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து  பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களின் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாகவும் மேலும் விவாதங்களை முன்மொழிவதாகவும் சோத்பி’ஸ் ஹாங்காங் தகவல் தெரிவித்துள்ளது.


திரவியரத்னாகர நிகண்டு (Dravyaratnākara Nighaṇṭu)  மற்றும் திரவியநாமகாரா நிகண்டு (Dravyanamākara Nighaṇṭu)  ஆகிய இரண்டு அரிய  ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம் உயிர்ப்பித்துள்ளது. 

  • திரவியரத்னாகர நிகண்டு: முத்கல பண்டிதர் கி.பி. 1480-ல் எழுதிய இந்த நூல் முன்பு வெளியிடப்படாத ஒரு சொற்களஞ்சியமாகும். இதில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன. இவை மருந்துகளின் பெயர்கள், குணங்கள் மற்றும் மருத்துவ பயன்பாடுகள் பற்றிய விரிவான அறிவை வழங்குகின்றன. 19-ஆம் நூற்றாண்டு வரை மகாராஷ்டிராவில் பரவலாக குறிப்பிடப்பட்ட இந்த நூல், தன்வந்தரி மற்றும் ராஜ நிகண்டு போன்ற பாரம்பரிய நூல்களிலிருந்து தகவல்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தாவரம், கனிமம் மற்றும் விலங்கு வகைகளில் இருந்து பல புதிய மருத்துவ பொருட்களை பதிவு செய்துள்ளது. டாக்டர் எஸ்.டி. கமட் அவர்களால் மீட்டெடுக்கப்பட்ட இந்த முக்கிய பதிப்பு, திரவியகுண மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுர்வேத துறைகளுக்கு ஒரு பெரிய பங்களிப்பாகும்.

  • திரவியநாமாகர நிகண்டு: : பிஷ்ம வைத்யரால் எழுதப்பட்ட இந்த தனித்துவமான படைப்பு, தன்வந்தரி நிகண்டுவின் இணைப்பாக செயல்படுகிறது. இது மருந்து மற்றும் தாவர பெயர்களின் பல பொருள் கொண்ட சொற்களை மட்டுமே கவனம் செலுத்துகிறது - இது ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான ஒரு சிக்கலான படிப்பு பகுதியாகும். 182 பாடல்கள் மற்றும் இரண்டு முடிவுரை பாடல்களைக் கொண்ட இந்த நூல், டாக்டர் கமட் அவர்களால் கவனமாக திருத்தப்பட்டு விளக்கவுரையுடன் கூடியதாக உள்ளது. இது ரஸசாஸ்திரம், பைஷஜ்ய கல்பனா மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத மருந்தியல் ஆகிய துறைகளின் அறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சரஸ்வதி நிகண்டு, பாவப்ரகாஷ நிகண்டு மற்றும் தன்வந்தரி நிகண்டு போன்றவற்றில் அதிகாரபூர்வ படைப்புகளுக்கு பெயர் பெற்ற டாக்டர் கமட், இந்தியாவின் ஆயுர்வேத பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தனது ஆழ்ந்த அறிவையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறார்.


திருத்தப்பட்ட SHAKTI கொள்கையை (இந்தியாவில் நிலக்கரியை வெளிப்படையாகப் பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யும் திட்டம் - Scheme for Harnessing and Allocating Koyala Transparently in India) மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

திருத்தப்பட்ட SHAKTI கொள்கையின் கீழ் பின்வரும் இரண்டு சாளரங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:

  1. மத்திய அரசு உற்பத்தி நிறுவனங்கள்/மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட விலையில் நிலக்கரி இணைப்பு: சாளரம்-I (Window-I - சாளரம்-I)

  2. அனைத்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட விலைக்கு மேல் பிரீமியத்தில் நிலக்கரி இணைப்பு: சாளரம்-II (Window-II - சாளரம்-II)

சாளரம்-I (நிலக்கரி அறிவிக்கப்பட்ட விலையில்):

  • மத்திய துறை வெப்ப மின்சார திட்டங்கள் (TPPs - வெப்ப மின்சார திட்டங்கள் - Thermal Power Projects) உட்பட கூட்டு முயற்சிகள் (JVs - கூட்டு முயற்சிகள் - Joint Ventures) மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கு நிலக்கரி இணைப்பு வழங்குவதற்கான தற்போதைய பொறிமுறை தொடரும்.

  • மின்சார அமைச்சகத்தின் (MoP - மின்சார அமைச்சகம் - Ministry of Power) பரிந்துரையின் பேரில், மாநிலங்களுக்கு அல்லது மாநிலங்களின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமைக்கு நிலக்கரி இணைப்புகள் ஒதுக்கப்படும். மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி இணைப்புகள், மாநிலத்தின் சொந்த உற்பத்தி நிறுவனம் (Genco - உற்பத்தி நிறுவனம் - Generation Company), கட்டண அடிப்படையிலான போட்டி ஏலம் (Tariff Based Competitive Bidding) மூலம் அடையாளம் காணப்பட்ட சுயாதீன மின்சார உற்பத்தியாளர்கள் (IPPs - சுயாதீன மின்சார உற்பத்தியாளர்கள் அல்லது மின்சாரச் சட்டம், 2003 (Electricity Act, 2003 - மின்சாரச் சட்டம், 2003) பிரிவு 62 இன் கீழ் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் (PPA - மின்சார கொள்முதல் ஒப்பந்தம் - Power Purchase Agreement) கொண்டிருக்கும் தற்போதைய IPPகள் ஆகியவற்றால் பயன்படுத்தப்படலாம். இது பிரிவு 62 இன் கீழ் PPA உடன் புதிய விரிவாக்க அலகு அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

சாளரம்-II (அறிவிக்கப்பட்ட விலைக்கு மேல் பிரீமியம்):

  • மின்சார கொள்முதல் ஒப்பந்தம் உள்ள அல்லது இணைக்கப்படாத எந்தவொரு உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தியாளரும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின்சார நிலையங்கள் (அவர்கள் விரும்பினால்) ஆகியவை, அறிவிக்கப்பட்ட விலைக்கு மேல் பிரீமியம் செலுத்தி, 12 மாதங்கள் வரை அல்லது 12 மாதங்களுக்கு மேல் 25 ஆண்டுகள் வரை ஏல அடிப்படையில் நிலக்கரியைப் பெறலாம். இது மின்சார நிலையங்களுக்கு அவர்களின் விருப்பப்படி மின்சாரத்தை விற்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

பின்னணி:

  • SHAKTI கொள்கை, 2017 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் நிலக்கரி ஒதுக்கீடு பொறிமுறையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஆட்சியிலிருந்து ஏலம்/கட்டண அடிப்படையிலான ஏலம் மூலம் வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு செய்யும் முறைக்கு மாற்றம் ஏற்பட்டது. மத்திய/மாநில துறை மின்சார நிலையங்களுக்கு மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்ட ஒதுக்கீடு தொடர்ந்தது. SHAKTI கொள்கை 2019 இல் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்டது. SHAKTI கொள்கை மேலும் 2023 இல் திருத்தப்பட்டது. SHAKTI கொள்கையில் பல்வேறு வகை மின்சார நிலையங்களுக்கு நிலக்கரி இணைப்பு ஒதுக்கீடு செய்ய பல்வேறு பத்திகள் உள்ளன, இவை தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருத்தப்பட்ட SHAKTI கொள்கையின் அறிமுகத்துடன், வணிக எளிமையின் உணர்வில், SHAKTI கொள்கையின் தற்போதைய மாற்றங்கள்  நிலக்கரி ஒதுக்கீட்டிற்கு இரண்டு சாளரங்களாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.

தொழிற்பயிற்சி நிறுவனங்களை (Industrial Training Institute) மேம்படுத்தவும், திறன் பயிற்சிக்காக ஐந்து தேசிய சிறப்பு மையங்களை (என்.சி.ஓ.இ - National Centres of Excellence) அமைக்கவும் ஒரு பெரிய திட்டத்தை  மத்திய அமைச்சரவை  அங்கீகரித்துள்ளது. இது மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டமாக இருக்கும். 

  • இந்தத் திட்டம், 2024-25 மற்றும் 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ.60,000 கோடி செலவாகும் (மத்திய அரசு: ரூ.30,000 கோடி, மாநில அரசு: ரூ.20,000 கோடி, தொழில்துறை: ரூ.10,000 கோடி). இதில் பாதி மத்திய பங்கை ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) மற்றும் உலக வங்கி (World Bank) கொடுக்கும். 

  • இதன் மூலம், 1,000 அரசு ஐ.டி.ஐ-களை மேம்படுத்துவார்கள். இவை மையம் மற்றும் கிளைகளாக (hub and spoke) இணைந்து, தொழில்களுக்கு தேவையான புதிய பயிற்சி பாடங்களை அறிமுகப்படுத்தும். மேலும், ஐந்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களை (என்.எஸ்.டி.ஐ - National Skill Training Institutes) வலுப்படுத்தி, அவற்றில் திறன் மேம்பாட்டிற்காக ஐந்து சிறப்பு மையங்களை உருவாக்குவார்கள்.

  • இந்தத் திட்டம், ஐ.டி.ஐ-களை அரசு உரிமையில், தொழில்துறை நிர்வாகத்தில், திறன் கற்க ஏற்ற இடங்களாக மாற்றும். மாநில அரசுகளும் தொழில்துறையும் இணைந்து இதைச் செய்வார்கள். ஐந்து ஆண்டுகளில், 20 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்களுக்கு தேவையான பயிற்சி கொடுக்கப்படும். இது, உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு தயார் செய்து, தொழில்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (எம்.எஸ்.எம்.இ - Micro, Small and Medium Enterprises), தேவையான தொழிலாளர்களை எளிதாகக் கிடைக்கச் செய்யும்.

  • மேலும், பயிற்சியாளர்களுக்கு (Training of Trainers) சிறந்த பயிற்சி அளிக்க, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், கான்பூர், லூதியானா ஆகிய இடங்களில் உள்ள ஐந்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 50,000 பயிற்சியாளர்களுக்கு புதிய மற்றும் தொடர் பயிற்சி கொடுக்கப்படும்.

பின்னணி:

  • இந்தியா 2047-இல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற கனவை நோக்கி செல்கிறது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சி, நாட்டின் பொருளாதாரத்தையும் வேலை உற்பத்தியையும் பெரிய அளவில் உயர்த்தும். 1950-களில் இருந்து மாநில அரசுகளால் நடத்தப்படும் ஐ.டி.ஐ-கள், தொழிற்கல்விக்கு முக்கியமானவை. 2014 முதல் இவை 47% வளர்ந்து, 14,615 ஆகவும், 14.40 லட்சம் மாணவர்களுடனும் உள்ளன. 


‘அர்னாலா’ (‘Arnala’) – உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு : 

  • கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் ( Garden Reach Shipbuilders and Engineers (GRSE), Kolkata) நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களில் (ASW SWCs (Anti-Submarine Warfare Shallow Water Craft)) முதலாவது கப்பல் இன்று (மே 08, 2025) காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.

  • இந்தப் போர்க்கப்பல் எல் அண்ட் டி, ஜிஆர்எஸ்இ பொதுத்துறை, தனியார் துறை ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு உற்பத்தியில் தனியார், பொதுத்துறை கூட்டு செயல்பாட்டின் வெற்றியை நிரூபிக்கிறது.

  • இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக மகாராஷ்டிராவின் வசாய் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையான ‘அர்னாலா’வின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. 77 மீ நீளமுள்ள இந்தப் போர்க்கப்பல், டீசல் இஞ்ஜின்-வாட்டர்ஜெட் ஆகிய இரண்டின் அடிப்படையில் இயக்கப்படும் மிகப்பெரிய கடற்படை போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் நீருக்கடியில் கண்காணிப்பு, தேடல், மீட்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இணைவது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும்.

  • 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துகிறது.

 

ஐ.என்.எஸ் சூனைனா (INS Sunayna / IOS Sagar) ஒரு மாத கால பயணத்தை வெற்றிகரமாக முடித்து, மே 8, 2025 அன்று கோச்சிக்கு திரும்பியது. இது தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடந்த பயணம்.

  • இது இந்திய கடற்படையின் முதல் முயற்சி. இந்தியப் பெருங்கடல் பகுதியைச் (Indian Ocean Region) சேர்ந்த ஒன்பது நாடுகளின் கடற்படை வீரர்கள் இணைந்து இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். இது கடல்சார் ஒத்துழைப்பில் ஒரு புதிய தொடக்கம்.

  • இந்தப் பயணத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏப்ரல் 5, 2025 அன்று கர்வாரில் தொடங்கி வைத்தார்.

  • ஐ.ஓ.எஸ் சாகர் (IOS Sagar), தார்-எஸ்-சலாம், நகலா, போர்ட் லூயிஸ், போர்ட் விக்டோரியா, மற்றும் மாலே ஆகிய துறைமுகங்களில் நின்றது.

பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்:

  • தான்சானியா, மொசாம்பிக், மொரிஷியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளில் கூட்டு கடற்பயிற்சிகள், தொழில்முறை மற்றும் கலாசார பரிமாற்றங்கள், மற்றும் கடல் எல்லை கண்காணிப்பு (இ.இ.இசட் - Exclusive Economic Zone).

  • ஆப்பிரிக்கா-இந்தியா முக்கிய கடற்பயிற்சி (ஏ.ஐ.கே.வை.எம்.இ - Africa India Key Maritime Exercise) 2025-இல், ஐ.என்.எஸ் சென்னை மற்றும் ஐ.என்.எஸ் கேசரி உடன் இணைந்து, இந்தியாவும் தான்சானியாவும் இணைந்து நடத்தினர்.

  • மொசாம்பிக் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளும், சமூக நிகழ்வுகளும் நடந்தன.

  • மொரிஷியஸ் காவல்துறை மற்றும் கடலோர காவல்படையுடன் நெருக்கமான ஒத்துழைப்பு, மற்றும் செஷல்ஸ், மாலத்தீவுகளில் கூட்டு நடவடிக்கைகள் நடந்தன.

  • இந்தக் கப்பலில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 44 வெளிநாட்டு வீரர்கள், இந்திய கடற்படையுடன் இணைந்து, "ஒரு கடல், ஒரு பணி" என்ற குறிக்கோளுடன் பணியாற்றினர்.

  • இந்தப் பயணம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, மற்றும் இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளி பங்கை உறுதிப்படுத்துகிறது.

இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் கில்டன் (INS Kiltan) சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (International Maritime Defence Exhibition (IMDEX Asia)) 2025-ல் பங்கேற்றது. இந்த கண்காட்சி 2025 மே 6 முதல் 8 வரை சிங்கப்பூரின் சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.


ஐஐடி திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), ஐஐடி பாலக்காடு (கேரளா), ஐஐடி பிலாய் (சத்தீஸ்கர்), ஐஐடி ஜம்மு (ஜம்மு – காஷ்மீர்), ஐஐடி தார்வாட் (கர்நாடகா) ஆகிய புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான மொத்த செலவு 2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு 11,828.79 கோடி ரூபாய் ஆகும்.

இந்த ஐஐடி-க்களில் மாணவர் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 6500-க்கும் கூடுதலாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் முதல் ஆண்டில் 1364 மாணவர்கள், 2-ம் ஆண்டில் 1738 மாணவர்கள், 3-ம் ஆண்டில் 1767 மாணவர்கள் மற்றும் 4-ம் ஆண்டில் 1707 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


இந்தியா SVAMITVA திட்டத்தை உலக வங்கி நில மாநாடு 2025-ல் (World Bank Land Conference 2025) காட்சிப்படுத்தியது:  வாஷிங்டன் டி.சி.-யில் (Washington DC) மே 5 முதல் மே 8, 2025 வரை  உலக வங்கி நில மாநாடு 2025 நடைபெற்றது. 

  • SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) என்பது கிராமப்புறங்களின் குடியிருப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடமாக்குதலைக் குறிக்கிறது. 

  • இது இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் (Ministry of Panchayati Raj) ஒரு மத்திய துறை திட்டம் (Central Sector Scheme) ஆகும். கிராமப்புற குடியிருப்பு உரிமையாளர்களுக்கு கிராமப்புற பகுதிகளில்  ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை (drone technology) பயன்படுத்தி நிலங்களை வரைபடமாக்குவதன் மூலம் "உரிமைகளின் பதிவு" (Record of Rights) வழங்குவதே இதன் முக்கிய நோக்கம்.

  • இது துல்லியமான நில ஆவணங்களை (land records) உருவாக்குவதையும், குடியிருப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை அட்டைகளை (legal ownership cards) (சொத்து அட்டைகள்/உரிமைப் பத்திரங்கள் - Property Cards / Title Deeds) வழங்குவதையும் உள்ளடக்கியது. 

  • இத்திட்டம் கிராமப்புற இந்தியாவிற்கு ஒரு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை (integrated property validation solution) வழங்க முயல்கிறது, இது குடியிருப்பாளர்கள் தங்கள் சொத்தை ஒரு நிதி சொத்தாக (financial asset) பயன்படுத்தவும், சொத்து தகராறுகளை (property disputes) குறைக்கவும், சிறந்த கிராமப்புற திட்டமிடலை (village-level planning) எளிதாக்கவும், இறுதியில் கிராமப்புற சமூகங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு (economic empowerment) பங்களிக்கவும் உதவுகிறது.

  • SVAMITVA திட்டம் 2020-2021 காலகட்டத்தில் ஒன்பது மாநிலங்களில் வெற்றிகரமாக சோதனை கட்டத்தை (pilot phase) முடித்த பின்னர், இந்தியாவின் பிரதமர் அவர்களால் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான (National Panchayati Raj Day) ஏப்ரல் 24, 2021 அன்று நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டது.

  • SVAMITVA திட்டத்தின் முக்கிய பயனாளிகள் (beneficiaries) இந்தியாவின் கிராமப்புறங்களில்  வசிக்கும் கிராமப்புற குடியிருப்பு உரிமையாளர்கள் (rural household owners) ஆவர். அவர்களுக்கு தெளிவான சட்டப்பூர்வ உரிமை ஆவணங்களை (சொத்து அட்டைகள் - Property Cards) வழங்குவதன் மூலம், அவர்களின் குடியிருப்பு சொத்துக்களுக்கு முறையான உரிமைகளை (formal rights) இத்திட்டம் வழங்குகிறது. இது அவர்களுக்கு தங்கள் சொத்தை கடன்கள் மற்றும் பிற நிதி நன்மைகளைப் பெற நிதி சொத்தாகப் பயன்படுத்த உதவுகிறது, சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைக்கிறது, மேலும் சிறந்த கிராமப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கு (rural planning and development) ஒரு அடித்தளத்தை வழங்குகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 6.62 லட்சம் கிராமங்களை உள்ளடக்கியதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


புதுதில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்விக்கழகம் (Indian Institute of Foreign Trade (IIFT)) புது தில்லியின்  வளாகத்தை குஜராத்தின் கிஃப்ட் நகரில் நிறுவ மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையம் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிகர்நிலை பல்கலைக்கழக விதிகள் 2023-க்கு இணங்க அமைக்கப்படவுள்ளது.  பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956, பிரிவு 3-ன் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


“பாரத் டெலிகாம் 2025 (Bharat Telecom 2025) என்ற தொலைத்தொடர்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்வை புதுதில்லியில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா 06.05.2025 அன்று தொடங்கி வைத்தார். தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (Telecom Equipment and Services Export Promotion Council (TEPC)), தொலைத்தொடர்பு துறையுடன் (Department of Telecommunications (DoT)) இணைந்து ஏற்பாடு செய்துள்ள  இந்த கண்காட்சியானது, தொலைத்தொடர்பு உற்பத்தி, சேவைகள், ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் திறனை எடுத்துக்காட்டும் தளமாக அமைந்துள்ளது.


தேசிய நீர்வழிகளில் சரக்கு வளர்ச்சியை அதிகரிக்க உலகளாவிய நிறுவனமான ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Rhenus Logistics India Private Limited) உடன் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (Inland Waterways Authority of India (IWAI)) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 6.5.2025 அன்று கையெழுத்திட்டது.  ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் என்பது ஜெர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச சரக்குப் போக்குவரத்து சேவை வழங்குநராகும்.


World 


ஜெர்மன் பிரதமராக ப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ப்ராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெயெர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். 


மறைந்த போப்பாண்டவரின் கடைசி ஆசையாக தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை காஸாவில் நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக  மருத்துவ வசதிகள் அடங்கிய நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்.  


ஐ.நா வெசாக் தினம் (UN Vesak Day 2025) 


  • ஐக்கிய நாடுகள் வெசாக் தினம் என்பது புத்த மதத்தின் நிறுவனர் கவுதம புத்தரின் பிறப்பு, ஞானம், மற்றும் பரிநிர்வாணம் (இறப்பு) ஆகியவற்றை நினைவுகூரும், உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாகும். இந்த நாள் வருடம் தோறும் வைசாக மாதம் வரும் முழு நிலா நாளில் (பொதுவாக மே மாதம்) கொண்டாடப்படுகிறது. இது பௌத்தர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது.

  • 1999ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 54/115-ஐ ஏற்றுக்கொண்டு, புத்த மதம் கடந்த இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனித ஆன்மீகத்துக்கும் கலாச்சாரத்துக்கும் அளித்த முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், வெசாக் தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.


ஐ.நா வெசாக் தினம்

மே 6–8, 2025

இடம்

வியட்நாம் புத்த மத அகாடமி, ஹோ சி மின் நகரம்

பிரதிநிதிகள்

சுமார் 3,000 (இதில் 85 நாடுகள்/பிரதேசங்களைச் சேர்ந்த 1,350+ சர்வதேச பிரதிநிதிகள்)

தலைப்பு

"மனித மரியாதைக்காக ஒற்றுமையும் பொறுமையும்: உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான புத்தர் ஞானம்"

சிறப்பு அம்சங்கள்

இந்தியா சார்நாதிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித அவயவங்கள்; முக்கிய ஊர்வலங்கள்; கல்வி கருத்தரங்குகள்

தேசிய முக்கியத்துவம்

வியட்நாம் 50வது விடுதலை ஆண்டு மற்றும் 80வது தேசிய தினத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டது


 

உலக தலசீமியா தினம் 2025, மே 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இது தலசீமியா (Thalassemia) என்ற பரம்பரை இரத்தக் கோளாறு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பு, ஆரம்பக் கண்டறிதல், மற்றும் நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பராமரிப்பை ஊக்குவிக்கவும் நடத்தப்பட்டது.

  • கோல் இந்தியா லிமிடெட், நிலக்கரி அமைச்சும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சும் இணைந்து, 2025 உலக தலாசீமியா தினத்தன்று நியூடெல்லியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் தலாசீமியா பால்சேவா யோஜனா (Thalassemia Bal Sewa Yojana (TBSY)) திட்டத்தின் முக்கிய வெற்றியை கொண்டாடின. 2017-ல் தொடங்கப்பட்ட இந்த CSR திட்டம், தலாசீமியா மற்றும் அப்ளாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வழங்குகிறது; இதுவரை 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து, அவர்களது குடும்பங்களுக்கு பெரிய நிதி சுமையை குறைத்துள்ளது.

  • 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள், “தலசீமியாவிற்காக ஒன்றிணைவோம்: சமூகங்களை ஒருங்கிணைத்து, நோயாளிகளுக்கு முன்னுரிமை” (Together for Thalassaemia: Uniting Communities, Prioritising Patients). இது ஒற்றுமை, சமூக ஆதரவு, மற்றும் தலசீமியா நோயாளிகளுக்கு முதலிடம் கொடுக்கும் அணுகுமுறையை வலியுறுத்துகிறது.


Science  & Technology (Unit I)

விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் (Global Conference on Space Exploration (GLEX) 2025) பிரதமர் திரு நரேந்திர மோடி  7.5.2025 அன்று உரையாற்றினார்.  இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற இந்த  மாநாடு 7-9 மே 2025 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது. உலகெங்கிலுமிருந்து அறிவியலறிஞர்கள் கலந்து கொண்டனர்.  

நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை - இந்தியாவின் சூழல் அமைப்பு குறித்த உச்சி மாநாடு 2.0 (Medium-Range Surface-to-Air Missile (MRSAM) India Eco-System Summit 2.0)  ஐ  ஏரோஸ்பேஸ் சர்வீசஸ் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுடன் கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையம் இணைந்து புதுதில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் மே 7 - ம் தேதி  வெற்றிகரமாக நடத்தியது.

உலகளாவிய ஆற்றல் மாற்றத்தில் முன்னணியில் இந்தியா  - மத்திய வர்த்தக & தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்:

மத்திய வர்த்தக & தொழில்துறை அமைச்சர் (Union Minister of Commerce & Industry), திரு. பியூஷ் கோயல் 6.5.2025 அன்று புது டெல்லியில் நடைபெற்ற கொலம்பியா இந்தியா ஆற்றல் உரையாடலில் உரையாற்றினார்.  அப்போது, அவர் உலகளாவிய ஆற்றல் மாற்றத்தில் இந்தியாவின் தலைமைப் பங்கை எடுத்துரைத்தார்.

  • உலக மக்கள்தொகையில் 17% பேரை கொண்டுள்ள போதிலும், இந்தியா உலகளாவிய கார்பன் உமிழ்வில் 3% மட்டுமே பங்களிக்கிறது.

  • "இந்தியா 2022ல் 200 ஜிகாவாட் (GW) என்ற 2030 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைந்தது—இது திட்டமிட்ட காலத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சூரிய சக்தி மட்டுமே கடந்த பத்தாண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா தொடர்ந்து யுஎன்எஃப்சிசிசி (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) அமைப்புக்கு தனது அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பித்து, உலகளாவிய இணக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது."

  • இந்தியா 500-ஜிகாவாட் (gigawatt) இணைக்கப்பட்ட தேசிய மின்கட்டமைப்பை (interconnected national grid) அடைந்துள்ளது. இந்த கட்டமைப்பு நாடு முழுவதும் 24/7 மலிவான ஆற்றல் அணுகலை உறுதிசெய்வதோடு மட்டுமல்லாமல், கணிசமாக அதிக தூய்மையான ஆற்றலை உள்வாங்கும் வகையில் அமைப்பை வலுப்படுத்துகிறது. கூடுதலாக, இந்தியா தரவு மையங்களுக்கான (data centres) வலுவான கட்டமைப்பை தயாரித்துள்ளது, இது உயர்மட்ட மாற்று ஏற்பாடுகள், நம்பகத்தன்மை மற்றும் மீள்திறனை உறுதிசெய்கிறது. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, தூய்மையான ஆற்றல் ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கி, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும்.

  • இந்தியா எல்இடி (LED - Light Emitting Diode) விளக்குகள் போன்ற துறைகளில் வேகமான முன்னேற்றங்களை அடைந்துள்ளது, இது உலகளவில் வேகமான புரட்சிகளில் ஒன்றாக இருந்தது. மேலும் மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன் (green hydrogen), உயிரி எரிபொருட்கள் (biofuels), எத்தனால் கலப்பு (ethanol blending) மற்றும் பசுமை அம்மோனியாவை (green ammonia) ஊக்குவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot