நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 7 மார்ச் 2018

TNPSC Current Affairs - 7th March 2018

தமிழகம்

v  5-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு   சென்னையில்  08-03-2018 அன்று துவங்குகிறது.
v  ”இந்திய விலங்குகள் நல வாரியத்தின்” (Animal Welfare Board of India (AWBI)) தலைமையிடத்தை சென்னையிலிருந்து  பெல்லாபாக்கிற்கு (ஹரியானா) மத்திய அரசு மாற்றியுள்ளது.

இந்தியா

v  ஆயுஷ்மான் பாரத் திட்டம் (Ayushman Bharat – the National Health Protection Scheme ) :  மத்திய பட்ஜெட் 2018-19 இல் அறிவிக்கப்பட்டுள்ள, தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டமான, இத்திட்டத்தின் மூலம்,   குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை  காப்பீடு வழங்கப்படும்.  இந்தத் திட்டத்தில் 10 கோடி ஏழை, எளிய குடும்பங்கள் இலக்காகச் சேர்க்கப்படும். இத்திட்டத்தின் பயனாளிகள் நாடெங்கும் ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சைப் பலன்களைப் பெறுவார்கள்.
v  அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட “M777 மிக இலகுவான குட்டை பீரங்கிகளை” (M777 ultra-light howitzers) இந்தியா - மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் சோதித்தனர்.
v  14 மாநிலங்களில் பழங்குடி இன சுகாதார பராமரிப்பு ஆராய்ச்சி திட்டத்தை (Tribal Health Care Research Programme (THCRP)) மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையம்  (Central Council for Research in Ayurvedic Science) தொடங்கியுள்ளது.
இந்த மையங்களின் முக்கிய நோக்கம் வருமாறு,
o    மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறைப் பற்றி ஆராய்தல்
o    சுகாதாரம் சார்ந்த தகவல்களைச் சேகரித்தல்
o    மலைவாழ் மக்களின் உணவு பழக்கவழக்கங்கள்,  பரவலாகக் காணப்படு நோய்கள்,  மருத்துவ தாவரங்களின் பயன்பாடுகளை அறிதல்
o    மலைவாழ் மக்களுக்குத் தேவையான  மருத்துவ உதவியை வீடுதேடி சென்று வழங்குதல்
o    ஆயுர்வேத மருத்துவ அறிவு, உணவு பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புனர்வை ஏற்படுத்துதல்/
o    சுகாதார மற்றும் தூய சூழலை ஏற்படுத்தி நோய்களைத் தடுத்தல்
v  பிரதமரின் விவசாயிகள் சம்பாதா திட்டம் (PRADHAN MANTRI KISAN SAMPADA YOJANA (PMKSY) :  வேளாண் கடல்சார் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள் உருவாக்குதலுக்கான இத்திட்டம், ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டில் 2016-20 காலத்திற்கான மத்திய பகுதி திட்டமாக மத்திய அரசால் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 14-வது நிதி ஆணையத்தின் சுழற்சியுடன் இணைந்து முடிவுக்கு வரும். இந்தத்திட்டம் 20 லட்சம் விவசாயிகளுக்கு பயனளித்து 2019-20ல் 5,30,500 நேரடி / மறைமுக வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.  
v  தேசிய தெரு விளக்குகள் திட்டம் (Street Lighting National Programme (SLNP)) :  ஜனவரி 5, 2015 இல் பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்,  மார்ச் 2019 க்குள்,  நாடெங்கிலுமுள்ள 1.34 கோடி, பழைய தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளால் மாற்றி அமைப்பதாகும்.     பிப்ரவரி 2018 வரை 28 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 49 லட்சம்  எல் இ டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
v  சுகத் யாத்ரா செயலியையும் (Sukhad Yatra mobile application) நெடுஞ்சாலை பயன்படுத்துவோருக்கான இலவச அவசர தொலைபேசி சேவையையும் (Toll-free Emergency number ) மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி 07-03-2018 அன்று துவங்கி வைக்கிறார்.
o    சுகத் யாத்ரா மொபைல் செயலியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நெடுஞ்சாலை பயன்படுத்துவோருக்கு அதிகாரம் அளிப்பதற்காக உருவாக்கி உள்ளது.  சாலையை பயன்படுத்துவோர் சாலையின் தரம் குறித்த தகவல்கள், சாலை விபத்து குறித்த அறிக்கை, சாலையில் உள்ள பள்ளம், படுகுழிகள் குறித்த அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது.
o    சுங்க வசூல் இடங்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது குறித்த தகவல் இந்த செயலியில் கிடைக்கும். மற்றும் சாலைகளில் பார்க்கத்தக்க முக்கிய இடங்கள் நெடுஞ்சாலை தங்குமிடங்கள் சிறிய தங்குமிடங்கள் போன்ற வசதிகள் குறித்த தகவலும் இந்த செயலியில் கிடைக்கும்.
o    சாலையை பயன்படுத்துவோர் அவசர நிலைகள் குறித்து அல்லது நெடுஞ்சாலை குறித்த தகவல்கள் அளிப்பதற்கு 1033 என்ற இலக்கம் கொண்ட இலவச தொலைபேசி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
o    மேலும், இத்திட்டத்தின் படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மாதிரி ஓட்டுனர் பயிற்சி மையம் அமைக்கப்படும். இதற்கு மத்திய அமைச்சகத்தின் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அமைப்புகள் இந்த தொகைக்கு சமமான தொகையை முதலீடு செய்ய வேண்டும். நாட்டில் கனரக மோட்டார் வாகனங்கள், இலகு ரக மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கான ஓட்டுனர் தேவையை சமாளிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
v  “பிரதான் மந்திரி முத்ரா யோஜனா” (The Pradhan Mantri MUDRA Yojana (PMMY)) : மத்திய பட்ஜெட் 2015-16 இல் அறிவிக்கப்பட்டிருந்த இந்த திட்டமானது ஏப்ரல் 8, 2015 அன்று மத்திய அரசினால் துவக்கி வைக்கப்பட்டது.  இதன் படி, விவசாயம் அல்லாத, சிறு, குறு தொழில்களை புதிதாக துவங்குவோருக்கு  ரூ.10 இலட்சம் வரையிலான கடனுதவி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளால் வழங்கப்படுகிறது.
o    இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த,  “முத்ரா” (MUDRA (Micro Units Development & Refinance Agency Ltd.) எனப்படும் சிறு தொழில் மேம்பாடு மற்றும் நிதியுதவு முகமை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  
v  ”இம்பிரிண்ட்” (ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் விளைவுகளை ஏற்படுத்துதல்) (IMPRINT - Impacting Research Innovation and Technology )  எனப்படும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடைமுறைப்படுத்துதலுக்காக ரூ.1000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ”இம்பிரிண்ட்”  திட்டத்தின் முக்கிய நோக்கம் , நாட்டில்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்துவதாகும்.
v  குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் குறைந்துள்ளன - யுனிசெஃப் அறிக்கை : 10 ஆண்டுகளுக்கு முன், 47 சதவீதமாக இருந்த குழந்தைத் திருமணங்கள், தற்போது, 27 சதவீதமாக குறைந்துள்ளதாக ஐ.நா.,வின் குழந்தைகள் நலனுக்கான, 'யுனிசெப்' (UNICEF - United Nations Children's Fund) அமைப்பு தெரிவித்துள்ளது.
v  புதிய மாநில முதல்வர்கள் பொறுப்பேற்பு :  சமீபத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்த  திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு புதிய முதல்வர்கள் பதவியேற்கவுள்ளார்கள்.  
o    திரிபுரா மாநில புதிய முதல்வராக  பா.ஜ.கா வைச் சேர்ந்த விப்லப் குமார் தேவ்  9-3-2018 அன்று பதவியேற்கிறார்.  
o    மேகாலய மாநிலத்தின் 12வது முதல்வராக கான்ராட் சங்மா  (தேசிய மக்கள் கட்சித் தலைவர்)  6.3.2018 அன்று பொறுப்பேற்றார்.
o    நாகாலாந்தின் புதிய முதல்வராக  நீபியூ ரியோ (தேசியவாத மக்கள் முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) தலைவர்) 8.3.2018 அன்று பொறுப்பேற்கிறார்.
v  ”சிக்மோத்ஷவ் 2018” (Shigmotsav 2018) எனும் கோவாவின் இந்து பாரம்பரிய திருவிழா  மார்ச் 3 முதல் 17 வரை நடைபெறுகிறது. 
v  இந்தியாவின் முதல் “ஹெலிகாப்டர் டாக்சி சேவை” (helicopter taxi service) 05-03-2018 அன்று பெங்களூருவில் துவக்கி வைக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த, “தும்பி ஏவியேசன்” (Thumby Aviation Private Limited) நிறுவனத்தினால் துவக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் டாக்சியில், ஆறு பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய ‘பெல் 407’  (Bell 407)  இரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.
v  தேசிய மருத்துவ தாவரங்களுக்கான வாரியத்தின் (National Medicinal Plants Board) பிராந்திய மையத்தை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மாண்டி மாவட்டத்திலுள்ள ஜோகிந்தர்நகரில் (Jogindernagar) அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
v  ”என்கோர்” (“ENCORE - Eastern Naval Command Operational Readiness Exercise)  & “பச்சிம் லேகர்” (Exercise Paschim Lehar)  என்ற பெயர்களில் இந்திய கடற்படை நடத்திய இரண்டுமாத போர் விளையாட்டுகள் (War Games) 28-02-2018 அன்று நிறைவடைந்துள்ளன. இவற்றில், ”என்கோர்” என்பது  இந்திய கப்பற்படையின்  கிழக்கத்திய கமாண்டினாலும், “பச்சிம் லேகர்” என்பது  இந்திய கப்பற்படையின்  மேற்கு கமாண்டினாலும் நடத்தப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள்

v  இந்தியாவிற்கு அதிக அளவில் எண்ணைய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி ஈராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

v  10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக வடகொரியா, தென்கொரியா உச்சி மாநாடு ஏப்ரல் 2018 மாதத்தில் நடைபெறவுள்ளது.
v  இலங்கையில் அவசர நிலை பிரகடனம் :  இலங்கையிலுள்ள, கண்டியில் சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்ததை அடுத்து அங்கு 10 நாட்களுக்கு  அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
v  யுஎஸ்எஸ் - லெஸ்ஸிங்டன்  (USS Lexington) எனப்படும், இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் கடலுக்கடியில் இருக்குமிடம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.மைக்ரேசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான பால் அலெனின் முன்முயற்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் முயற்சியின் விளைவாக, அந்த விமானம் தாங்கிக் கப்பலும், அதிலிருந்த விமானமும் கண்டறியப்பட்டுள்ளன.
v  ”இணையதள சமநிலை விதிகளுக்கு”  (net-neutrality rules) ஒப்புதல் வழங்கியுள்ள முதல் அமெரிக்க மகாணம் எனும் பெயரை வாசிங்டன் பெற்றுள்ளது. இதன் மூலம், அம்மகாண மக்களுக்கு வழங்கப்படும் இணையதள சேவையில், இணையதள சேவை ஒழுங்குமுறை அமைப்புகளின் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன.
v  ஜப்பானின், போர்க்கப்பல் பிரிவில்  முதல் பெண்  கமாண்டராக ‘ரியோகோ அசூமா” (Ryoko Azuma)  என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

v  ”சம்போஷி” (Saposhi) என்ற பெயரிலான இணையதளங்களைத் தாக்கும் ”தீங்குநிரலை”  (malware) இந்திய கணினி அவசர எதிர்ப்பு குழுவினர் (Computer Emergency Response Team) கண்டறிந்துள்ளனர்.

விளையாட்டுகள்

v  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - இரண்டாவது தங்கம் வென்று மானு பேக்கர் சாதனை :  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால்.மெக்ஸிகோவின் குவாதலஜராவில் நடைபெறும் இப்போட்டியில் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மானு பேக்கர் 237.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !
                                  - - - - - - - - - -- - - - -

Group II & I  2018 Prelims Test Batch from 1st April 2018
For Registration and More Details Visit 
8778799470 / 9385632216
-------------------


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!