நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 6th March 2018


TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 6 மார்ச் 2018

தமிழகம்

v  தமிழ்நாட்டிற்கு இரண்டு சாலை மறுவாழ்வு திட்டங்கள் அனுமதி  வழங்கப்பட்டுள்ளன: இதன் படி,
o    தேசிய நெடுஞ்சாலை எண் 234-ல் (குடியாத்தம் புறவழிச்சாலை முதல் வேலூர் புறவழிச்சாலை வரை) 1.5 மீட்டர் அகலத்திற்கு சாலையின் இரு புறங்களிலும், தளம் அமைக்கப்படும். திட்டத்தின் மொத்த நீளம் 49.35 கிலோ மீட்டர். இந்த திட்டம் ரூ.138.06 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
o    நெடுஞ்சாலை எண் 383 தற்போதுள்ள இருவழிச்சாலையின் (திண்டுக்கல் நத்தம் பிரிவு) இருபுறங்களிலும்  தளம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த நீளம் 38 கி.மீ. இந்த திட்டம் ரூ.240.38 கோடியில் நிறைவேற்றப்படும்.
v  தமிழ்ப் பல்கலைக்கழகம் - மோரீஷஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பு ஒப்பந்தம் : தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமும், மோரீஷஸ் நாட்டின் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பும் இணைந்து தமிழர்களின் தத்துவம் தொடர்பான ஆய்வுகளில் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை செய்து கொண்டன. மோரீஷஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. பாஸ்கரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
v  தமிழக சட்டசபை புதிய செயலராக, சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
v  சென்னையிலுள்ள 7 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் : காவல் நிலையப் பணியை மேம்படுத்துவதற்கும், காவல் நிலையத்தை பொதுமக்கள் எளிதாக அணுகுவதற்கும் குறிப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் பொதுமக்கள் தேவையறிந்து செயலாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கான நோக்கில்,  ஐ.எஸ்.ஓ. 9001-2000 சான்றிதழ் சென்னையின், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல், அம்பத்தூர் தொழிற்பேட்டை, நசரேத்பேட்டை, போரூர் எஸ்.ஆர்.எம்.சி., குன்றத்தூர், ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம் ஆகிய 7 காவல் நிலையங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

v  29 வது சர்வதேச யோகா திருவிழா” (International Yoga festival), 03-03-2018 அன்று,  உத்தர்காண்டின்  ரிஷிகேஷிலுள்ள பரமார்த்த நிகேதன்” (Parmarth Niketan) ஆஷ்ரமத்தில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
v  உலகிலேயே வலிமையான இராணுவங்களைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில்  இந்தியா நான்காவது இடத்திலுள்ளது.  குளோபல் ஃபயர்பவர்” (Global Firepower) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா,  ரஷியா மற்றும் சீனா நாடுகள் பெற்றுள்ளன. பாகிஸ்தான் நாடு 13 வது இடத்தைப் பெற்றுள்ளது.
v  அரக்கு பள்ளத்தாக்கில் (Araku Valley) விளையும் காபிக்கு பிரிமீயம்  அடையாளம் (Premium Tag) :  ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் பழங்குடியின சமூகத்தினர் பயிர் செய்யும் காபியின் தனி அடையாளத்தை பாதுகாப்பதற்காக புவியியல் குறியீடு திட்டத்தின்கீழ் அதனைப் பதிவு செய்வதற்கு காபி வாரியம் மனு செய்துள்ளது. அரக்குப்பள்ளத்தாக்கில் பயிராகும் அராபிகா (Arabica) காபி உயர்தரமான சிறப்பு காபி என சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
v  தேசிய கையெழுத்துப்படிகள் பாதுகாப்புத் திட்டத்தின்  (National Mission for Manuscripts (NAMAMI)) கீழ்  இதுவரையில் 43 இலட்சம் கையெழுத்துப் படிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும். 2.85 இலட்சம் கையெழுத்துப்படிகள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
கூ.தக. தேசிய கையெழுத்துப்படிகள் பாதுகாப்பு திட்டம் பிப்ரவரி 7, 2003 இல் துவங்கப்பட்டது. இதன் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது.
v  "ஹிரிதய்” (HRIDAY -National Heritage City Development and Augmentation Yojana)  எனப்படும் தேசிய பாரம்பரிய நகரங்களின் மேம்பாட்டிற்கான திட்டத்தின் கீழ்  12 பாரம்பரிய நகரங்களின் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக மேலும் ரூ.240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூ.தக. :  "ஹிரிதய் ” (HRIDAY) திட்டமானது ஜனவரி 21, 2015 அன்று ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் துவங்கப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரண்ட்டு பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள 12  நகரங்களின் விவரம் வருமாறு, ஆஜ்மீர், அம்ரிஸ்தர், அமராவதி, வாதாமி, துவாரகா, கயா, காஞ்சிபுரம், மதுரா, பூரி, வாரணாசி, வேளாங்கண்ணி மற்றும் வாரங்கல் ஆகியன.
v  ஏக் பாரத் ஷ்ரெஸ்தா பாரத் (Ek Bharat Shreshtha Bharat (EBSB)) திட்டம் பற்றி :  தேசிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்ட இத்திட்டத்தின் மூலம், மாநிலங்களுக்கிடையே, யூனியன் பிரதேசங்களுக்கிடையே, மத்திய அமைச்சரவைகளுக்கிடையே, கல்வி நிறுவங்களுக்கிடையே, பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பொது மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்திற்காக 2017 ஆம் ஆண்டில்  இணைந்துள்ள மாநிலங்களின் பட்டியல்


Jammu & Kashmir : Tamil Nadu
Punjab : Andhra Pradesh
Himachal Pradesh : Kerala
Uttarakhand : Karnataka
Haryana :Telangana
Rajasthan : West Bengal
Gujarat : Chhattisgarh
Maharashtra :Odisha
Goa : Jharkhand
Delhi : Sikkim & Assam
Madhya Pradesh : Manipur & Nagaland
Uttar Pradesh : Arunachal Pradesh & Meghalaya
Bihar : Tripura & Mizoram
Chandigarh : Dadra & Nagar Haveli
Puducherry : Daman & Diu
Lakshadweep : Andaman & Nicobar


v  வீட்டுப் பணியாளர்களுக்கான தேசிய கொள்கை (National Policy for Domestic Workers) உருவாக்க மத்திய அரசினால் விவாதிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் பணியாளர் நலத்துறை (பொறுப்பு) இணையமைச்சர் திரு. சந்தோஷ் கங்வார் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
கூ.தக : ராஜஸ்தான், கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதிய விகித சட்டத்தில் வீட்டு வேலை செய்வோரையும் சேர்த்துள்ளன. எனவே, அவர்களுக்கு இது தொடர்பாக ஏதாவது குறை இருந்தால், வழக்குத் தொடர உரிமையுண்டு.
v  வியத்தகு இந்தியா 2.0” (Incredible India 2.0)  பரப்புரை :  மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் அவர்களால் துவங்கப்பட்டுள்ள இந்த பரப்புரையின் மூலம் இது வரை பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கைகளை, சந்தை சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

v  வியட்நாம் போருக்கு (1955-1975) பின்னர் முதல் முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் வியத்நாம் வருகை :  அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் கார்ல் வின்ஸன்  நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக வியத்நாமின் டானாங் துறைமுகத்தை 05-03-2018 அன்று வந்தடைந்தது.


v  பிரிட்டன் பயங்கரவாத தடுப்பு அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஸ்காட்லாந்து யார்டு காவல் துறை அதிகாரியுமான நீல் பாசு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

v  நிதித்தொழில்நுட்ப (Fintech) விதிகளை எளிதாக்கும் நோக்கில் வழிகாட்டுதல் குழுவை மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ளது.           
v  உலகிலேயே, குறியாக்கிய நாணயத்தை (cryptocurrency) சட்டரீதியாக அறிமுகப்படுத்திய முதல் நாடு  எனும் பெருமையை மார்ஷல் ஐலண்ட் (Marshall Islands) நாடு பெற்றுள்ளது. தான் அறிமுகப்படுத்தியுள்ள குறியாக்கிய நாணயத்திற்கு சாவ்” (SOV) என அந்நாடு பெயரிட்டுள்ளது.

விருதுகள் / மரியாதைகள்

v  ஆஸ்கர்  விருதுகள் 2018 :  90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 05-03-2018 அன்று நடைபெற்றது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல டி.வி. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.
o    சிறந்த நடிகர் -  கேரி ஓல்டுமேன் (டார்க்கஸ்ட் ஹவர் ) (Darkest Hour)
o    சிறந்த படம் - தி ஷேப் ஆப் வாட்டர்’ (The Shape of Water)
o    சிறந்த டைரக்டர் -  கில்லெர்மோ கொல்டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)
o    சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டர்மென்ட் (திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசவுரி)(Three Billboards Outside Ebbing)
o    சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டிக்கின்ஸ் (பிளேட் ரன்னர்) 
o    சிறந்த வெளிநாட்டு படம் - ஏ பெண்டாஸ்டிக் உமன் (சிலி)
o    சிறந்த ஒலிக்கலவை - டன்கர்க் திரைப்படம்
o    சிறந்த முழுநீள ஆவணப்படம் - இகாரஸ்
o    சிறந்த துணை நடிகர்-சாம் ராக்வெல் (திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசவுரி)
o    சிறந்த துணை நடிகை-ஆலிசன் ஜேனி (ஐ டான்யா)
o    சிறந்த அனிமேஷன் படம்-கோகோ
o    சிறந்த குறும்பட இயக்குனர்-கிறிஸ் ஓவர்டன்
o    சிறந்த திரைக்கதையாசிரியர்-ஜோர்டன் பீலே (கெட் அவுட்)
o    உடை வடிவமைப்பு-மார்க் பிரிட்ஜஸ் (பாந்தம் திரட்)

அறிவியல் தொழில்நுட்பம்

v  'மக்னாவம்' (Magnavem)  எனப்பெயரிடப்பட்டுள்ள  உலகின் முதல் அணுசக்தி விமானத்தை (nuclear-powered airliner)  விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். மணிக்கு 1,850 கி.மீ., வேகத்தில் செல்லும் இதில் 500 பயணிகள் வரை பயணிக்கலாம்.  
v  வெள்ளி தாமிர டெல்லூரைட் (silver copper telluride (AgCuTe))  எனப்படும் புதிய  தனிமத்தை  பெங்களூருவிலுள்ள ஜவஹர்லால் நேரு  அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச்  (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research (JNCASR)) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.  இந்த புதிய தனிமமானது, வெள்ளி, தாமிரம் ஆகியவற்றின் வெப்பவியல் மற்றும் மின்னியல் கூறுகளைக் கொண்டதாக இருப்பதாக உள்ளதால் சிறந்த மின் கடத்தியாக விளங்குகிறது.

 விளையாட்டுகள்

v  தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் சிவா தேசிய  சாதனை.   தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் தமிழக வீரர் சுப்ரமணிய சிவா சாதனையுடன் தங்கம் வென்றார். ராணுவ வீரரான சிவா, இம்முறை 5.15 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார். முன்னதாக அவரே 5.14 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.
v  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியா பெற்ற பதக்கங்கள்:
o    மெக்சிகோவின் கடலாஜாராவில் நடந்து வரும்  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்,  ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், ஒலிம்பிக் சாம்பியன் கிறிஸ்டியன் ரீட்சை (ஜெர்மனி) பின்னுக்கு தள்ளிவிட்டு,  இந்திய வீரர் ஷாஜர் ரிஸ்வி 242.3 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
o    ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் 239.7 புள்ளிகளுடன் 2–வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் ஜிது ராய் 219 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கமும் வசப்படுத்தினர்.
o    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் ருமேனியாவின் லாரா ஜார்ஜெட்டா (251.5 புள்ளி) தங்கமும், சீனாவின் சூ ஹாங் (251 புள்ளி) வெள்ளியும் வென்றனர். 228.4 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்த 17 வயதான இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
o    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை மனு பாகெர் (ஹரியானா) 237.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். முன்னாள் உலக சாம்பியனான மெக்சிகோவின் அலெஜான்ட்ரா ஜாவாலா 237.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை செலின் கோபெர்விலே 217 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
v  சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன் : மாஸ்கோவில் நடந்த சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஷகாரியார் (ரஷியா), கர்ஜாகின் (ரஷியா), நகமுரா (அமெரிக்கா) ஆகியோர் 5 புள்ளிகளுடன் முறையே 2 முதல் 4 இடங்களை பிடித்தனர்.

-----------------------

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!